உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 று பட்டன. விஞ்ஞானத்தால் கலையே மக்களுடைய பொது உடைமையாயிற்று. ஒரு குறிப்பிட்ட மொழியிலேயே கலை இருக்கவேண்டு மென்று எண்ணுவது தவறு என்று ஏற் பட்டதுபோல ஒரு சிறு சிறு கூட்டத்தினிடமே கலை இருக்கக் கூடிய நிலைமாறிற்று. கலையும் கைமாறிற்று. சிலரிடத்திலே சிரித்துப்பேசிச் சுருங்கிக்கிடந்த கலை எல்லா மக்களிடமும் புன்னகை பூத்த முகத்துடனே கொஞ்ச வேண்டிய பரந்த நிலை ஏற்பட்டது. மக்களும் நாடும் உயர்வதோடன்றி கலை யும் பெருகிற்று. இசைத்தட்டும் ஒலி பெருக்கியும் அச்சுப் பொறியும் படக்காட்சியும் பிறவும் இத்துறையில் கலையைப் பொதுமையாக்கி வளர்ப்பதற்குப் பெரிதும் காரணமாயின. பிரெஞ்சு நாட்டிலே மூயில்பெரி என்பவர் குடியரசுத் தலைவரானார். கல்விக் கலையைப் பொது மக்கள் அனைவரும் பெறுவதற்குத் தடையாகக் குருக்கள் வாழ்வும் மத ஏற் பாடும் இருந்ததைத் தொலைத்துக் கல்வியைப் பொதுமை யாக்கினார். அதைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர் கள் தமது அழகிய கருத்துரைக் கவிதையில், வறியோர்க் கெல்லாம் கல்வியின் வாடை வரவிடவில்லை மதக் குருக்களின் மேடை நறுக்கத் தொலைந்தது அந்தப் பீடை நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை. என்று அழகாக ஆனால் ஆணித்திறமாகக் கூறினார். அதைப் போலத்தான் மேல்நாடுகளிலே மக்களிடத்தே கலைகள் கலைகள் பல வும் பரவின. கலையின் பரந்த வளர்ச்சிக்கு இடையூறாக எழுப்பப்பட்டிருந்த அத்தனைத் தடைச் சுவர்களும் இடித் துத் தகர்த்தெறியப்பட்டன. அதன் விளைவாகத்தான் கிரேக்க ரோம சாம்ராச்சியங் கள் பகற்கனவுகளானது மட்டுமன்றி சாம்ராச்சிய எண் ணமே இருள் அடைய நேரிட்டது. சக்கரவர்த்தி ஆளும் முறைக்கே அழிவு ஏற்பட்டது. அரசனின் தெய்வீகத் தன்மையும் தான்தோன்றித்தனமும் மறைய நேரிட்டன.