உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 வால்டேரும் ரூசோவும் மார்டின் லூதரும் மார்க்சும் தோன் றியதன் பயன் பெருகிற்று. அரும்பெரும் கலையும் அழகுற வளர்ந்தது. அதனுடன் கருத்தும் நெடுக வளர்ந்தது. பிரெஞ்சுப் புரட்சி, விடுதலை வீரன் வால்டேர் விளைத்த கலைப் புரட்சியின் விளைவல்லவா? ரஷ்யா நாட்டின் பொது உடை மைக் காட்சி கார்ல் மார்க்ஸின் கருத்தின் கனியல்லவா? நோயாளித் துருக்கி, இன்றைய தினம் பலம் பொருந்திய வல்லரசானது அங்கு நிகழ்ந்த கலைப் புரட்சியின் விளைவு தானே! சிந்தனையில் இச்சித்திரங்களைப் பதிந்து கொள்ளுங் கள். பிறகு சொல்லுங்கள் கலை, பற்பல நாட்டின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்து மறுகோலம் செய்து விட் டதா இல்லையா என்பதை. இதுமட்டுமே அன்று கலை தந்த மாற்றம். மக்கள் எண்ணத்துறையிலும் எழுத்துத் துறையி லும் மட்டுமன்றி வாழ்க்கைத் துறையிலும் பல மாற்றங் களைக் கலை விளைவித்திருக்கின்றது. பழைய வீனசும் அபோ லோவும் புதிய கிரேக்க நாட்டில் யாண்டோ சென்று மறைந்து போயினர். தாரும் ஓடினும் இப்பொழுது வணங் கப்படுவதில்லை. இஞ்ஞான்று அவர்களுக்கு 'ஒன்றே தெய் வம்' ஒருவரே வழிகாட்டி. ஏசு கிருஸ்த்து வகுத்த வழியே அவர்கள் சமயநெறி. அவர்களிடத்திலுங்கூட வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அவர்கள் யாவரும் முன்னேற்றத்தை நோக்கி, சீர்திருத்தத்தை நோக்கி, புது மையை நோக்கி, இனிவரும் உலகத்தை நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறார்கள். P ஆம்! அங்கெல்லாம் கலை வளர்ச்சி இன வளர்ச்சியாய், நாட்டின் பொருள் வளர்ச்சியாய், அறிவின் பெரு வளர்ச்சி யாய்ப் பரிணமிக்கிறது. ஆனால், இங்கு? இங்கேயும் தான் கலை இருக்கிறது. இங்கேயும் தான் இலக்கியம் வளர்ந்து கொண்டு வந்திருக்கிறது. இங்கே கூடத்தான் பலப் பல காவியமும் ஓவியமும் அழகுபெற இயற்றப்பட்டு இருக்கின் றன. ஆனால் இங்குள்ள கலையின் நிலை என்ன ? அது எதற் குத் துணையாகிறது ? மக்கள் வாழ்க்கையை அது எந்த அள P