உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

று 21 கோட்டையின் காவலர்கள் அல்லர். இந்தியாவினுடைய ஒரு சிறந்த அறிஞர் என்று சொல்லப்படுகின்ற பண்டித மதன்மோஹன மாளவியாவும் உலகத்திலேயே ஒரு தலை சிறந்த தத்துவஞானி என்று கூறப்படும் ஸர் எஸ். இராதா கிருஷ்ணன் அவர்களும் தான். இந்த நிலை கலையை வளர்க்கு மென்று கருதுகிறீர்களா? இப்படிப்பட்ட கலைக்கொள்கை நிலைநாட்டப்படுவது மக்கள் வாழ்க்கையை அழிப்பதாகாதா? நம்முடைய நாட்டிலே கலை எந்த நிலையில் இருக்கிறது? உயர்ந்த கலையே படிக்கப்பட்டாலும் வாழ்க்கையிலே கையா ளப்படுவதில்லை. எடுத்துக் காட்டாக விஞ்ஞானக் கலை பயின்றவனே பூமி தட்டை என்ற கதையை நம்புகிறான், ஆதிசேஷனை வணங்குகிறான். கிரகணத்திற்குக் காரணம் இன்னது என்று தெளிவாய்த் தெரிந்திருந்தும் விஞ்ஞானக் கலை அதனை விளக்கிக் காட்டியிருந்தும் அது தெரிந்தவனே கிரகணத் தீட்டைப்போக்க தலை முழுகத் தலைப்படுகிறான். இதுவே உயர்ந்த கலை நம் நாட்டில் பெற்றுள்ள நிலை. கற்கும் கலை வாழ்வோடு தொடர்பு பெறவில்லை என்றால் நாடு எப் படி முன்னேற்ற மடையும்? நம்முடைய நாட்டிலே கலை எந்த நீதியைத் தோற்று வித்து இருக்கின்றது. மனுஸ்மிருதியும் பராசர ஸ்மிருதி யும் தானே இந்துமதச் சட்டம் என்ற பெயரால் இன்றள வும் நிலவி வருகின்றன. மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி என்றுரைக்கப்பட்டு உணரப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்ட பின்பும் அதை அடிப்படையாய்க் கொண்டெழுந்த இந்து சட்டத்தில் ஏதாவது மாற்றம் கண்டோமா? சூத்திரன் உழைப்பதற்குமட்டுமே உரிமையுள்ளவன். பார்ப்பனன் உழைக்காமல் உண்பதற்கும் பொருள் சேர்ப்பதற்கும் மட் டுமே பிறந்தவன் என்று கூறுகிறதே மனுநீதி. ஏன் அந்தப் பொய்மைக் கலை இன்னும் உலவி வருகிறது? இது பெரும் பான்மையோருக்கு - இல்லை மனித சமுதாயத்திற்கே கலை இழைத்த துரோகமாகாதா?