உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 ம் நீதியிருக்கட்டும் இந்நாட்டு இலக்கியங்களைக் காணலாம். இலக்கியங்களைத் தெளிவாகச் சங்க இலக்கியங்க ளென்றும் பிற்காலக் காப்பிய இலக்கியங்கள், பிரபந்தங்கள் என்றும் பிரிக்கலாம். சங்க இலக்கியங்கள் அகமும் புறமும் என இரண்டுவகையாகும். மனிதனின் உள்ளத்துணர்வு அன் பாய் வெளிப்படும் வகையை விரித்துரைப்பது அகத்துறை. மன எழுச்சி வீரத்தால் வெளிப்பட்டு வீறுடன் விளங்கும் முறையை விளக்கிக் விளக்கிக் கூறுவது புறத்துறை. அவைகளைச் சார்ந்தே மக்களின் ஒழுக்கத்தைக் கூறும் நீதி நூல்களும் அமைவன. இவைகட்கெல்லாம் முதற்கண்ணே தோன்றி யது தொல்காப்பியம் என்ற இலக்கணமாம். நற்றிணையும், குறுந்தொகையும், ஐங்குறுநூறும் பதிற்றுப் பத்தும், பரி பாடலும், கலித்தொகையும். அகமும் புறமும் எட்டுத் தாகை இலக்கியங்களாகும். பத்துப் பாட்டும் மற்றோர் தொகை நூல். இவை தொகுக்கப்பட்ட காலத்திலேயே திறக்குறளும் இயற்றப் பெற்றதாகும். இவைகளுக்குப் பின் னால்தான் காப்பியங்கள் தோன்றலாயின. இவற்றுள் காலத் தாலும் தன்மையாலும் தனியிடம் பெறுவது சேரர் பரம் பரையைச் சேர்ந்த இளங்கோவடிகள் இயற்றிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம். உடன் காலத்திலேயே இயற்றப்பட்டது, மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்த னாரை ஆசிரியராகக் கொண்ட மணிமேகலை யாகும். மணிமேகலைக்குப் பின், குண்டலகேசியும் வளையாப பதி யும் தோன்றின. இவற்றிற்குப் பின், கொங்குவேள் மாக் கதை என்னும் பெருங்கதையும், அதன்பின் திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்னும் முதல் விருத் தக் காப்பியமும் தோன்றின. இதன் விளைவாக, சேக்கிழா ரின் பெரியபுராணம், அதன்பின் கம்பரின் இராமாயணம், கச்சியப்ப சிவாசாரியார் இயற்றிய கந்தபுராணம்; இடையி லேயே மேருமந்தர புராணம்; இதற்குப் பின், வில்லிபுத் தூரார் பாரதம்; அதை ஒட்டிய காலத்தே திருவிளையாடல் புராணம் (வேம்பத்தூரார் திருவிளையாடல் ஒன்று, பரஞ் சோதி திருவிளையாடல் ஒன்று), மற்றும் காஞ்சிப் புராணம்,