24 தணிகைப் புராணம், போன்ற பற்பல தலபுராணங்களும் வெளிவந்தன. சிலப்பதிகாரத்திலிருந்து சிவகாசி தலபுராணம் வரை யில் அடுக்கி வைத்துப் பாருங்கள். காலத்தோடு ஒட்டி வளர்ந்த அவற்றின் கருத்து வளர்ச்சியையும் எண்ணிப் பாருங்கள்.கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய முதல் பெருங்காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில், முத்தமிழ் உண்டு, முத்தமிழ் நாடும் அதன் மன்னர்களும் உண்டு; கோவலனும் கண்ணகியும் மாதவியும் உண்டு. ஓரளவு கற் பனை கலந்திருந்தாலும் அறிவினை மறைக்கின்ற அளவுக்கு அது இடம்பெறவில்லை. மணிமேகலை புத்தமதப் பெருமை யைக் கூறுவதற்காகவே அமைந்துள்ளது, மதத்திற்காக ஒரு சமயத்திற்காக, அதை மக்களிடைப் புகுத்துவதற்காக சிலப்பதிகார வரலாற்றுத் தொடர்பு காட்டி மணிமேகலை வரையப் பெற்றது. அதன்பின் தோன்றிய குண்டலகேசி யும் புத்தமதச் சார்பானதே. ஆறாவது நூற்றாண்டில் தோன்றிய பெருங் கதையும் ஓர் சமண சமயத்தவராலே அம்மதக் கொள்கையை விளக்கி எழுதப்பட்ட தாகும். " பதியும் இக்காலத்தே சமண சமயக் காப்பியமாகவே தோன்றியதாகும். அதற்குப் பின் எட்டாவது நூற்றாண் டில், திருத்தக்க தேவரால் சீவக சிந்தாமணி என்ற சமய காப்பியம் தோன்றியது. அந்த சிந்தாமணி. மக்களும் மன் னரும் போற்றுவதாக அமைந்ததைக் கண்ட சேக்கிழார், சைவ மதப் பெருமையைக் காப்பிய மூலமாகச் சொல்லக் கருதியே பெரிய புராணத்தை இயற்றுவாராயினார். வைணவ மதம் வாளாயிருந்திடுவதா என்ற எண்ணத்தாலேயே, பத் தாம் நூற்றாண்டின் இறுதியில் கம்பர், இராமாயணத்தை இம்மென்னு முன்னே எழுநூறும் அம்மென்னு முன்னே ஆயிரமுமாகப் பாடி முடித்தார். இதைப் பார்த்து' கதைத் தொடர்புடையதாகச் சைவப் புராணம் தேவை என்ற எண்ணங் கொண்டு கச்சியப்ப சிவாசாரியார் கந்தபுராணம் இயற்றினார். பதினான்காம் நூற்றாண்டில், வில்லிப்புத்தூ
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/30
Appearance