உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 காறும் கலை வளர்ந்த முறையே மாற்றப்பட வேண்டும் என்று கருதுகிறோம். மக்கள் தம் வாழ்க்கையிலே அவ நம் பிக்கை கொண்டதுபோதும், இனியாவது நம்பிக்கைக்கு, உற்சாகத்திற்கு இடமேற்படட்டும் என்று கூறுகிறோம். இது தவறாகுமா P இதைத்தான் - புரட்சிக்கவிஞர் அவர்கள், "தமிழனே இது கேளாய் உன்பால் சாற்ற நினைத்தேன் பலநாளாய்" - - என்று தொடங்கி, கமழும் உன் தமிழினை உயிரென ஒம்பு காணும் பிறமொழிகளோ வெறும் வேம்பு நமையெலாம் வடமொழி தூக்கிடுந் தாம்பு நம் உரிமைதனைக் கடித்ததப் பாம்பு - என்று ஆரிய நச்சரவு - தன் நஞ்சினைத் தமிழில் கக்கியதை யும், அந்நஞ்சு - தமிழின் தலைக்கேறியதையும் - தமது இசை யமுதில் இசைபடக் கூறினார். ஆரியச் சேர்க்கையால் தமிழ்க் கலை இந்நிலைக்காளாயிற்று. மேலும் கவி கூறுகிறார்."நம் செயல், ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்" என்று கலையை - ஆரியத்துக்கு நிலைக்களமாக அனுமதித்ததால் தான் -நம் செயல் அழிக்கப்பட்டது. அதனாலேதான் செல்வாக்கற்று செயலற்றுவிட்டனர் தமிழர், ஒழுக்கமும் அழிந்தது. விருப்பமும் ஒழிந்தது. இவற்றையெல்லாம் கண்டபின்னுங் கூட, ஆரியக்கலை, நச்சரவின் வடிவிலே நெளியும் புராண ஏடு களிலே இன்னும் தமிழருக்குக் காதலா? ၃ இதுமட்டுமா? ஆரியம் இலக்கியங்களில் கைவைத்த தோடாவது நின்றுவிட்டது என்று கருதமுடியுமா இல்லை. இலக்கணங்களும் ஆரியத்துக்கு இரையாயின. தொல்காப்பியமும் ஓரளவு தூய்மை யிழந்தது. நன்னூலும் சின்னூலாயிற்று. வீர சோழியமும் சோழியமும் பிறவும் ஆரியத் தீண்டலால் பிறழ்ந்தன. காரிகையின் நிலையோ, காரிகை கற்றுக் கவிபாடுவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே என்று கவிஞரையே கவிபாடச் செய்தது. - வை