35 யிருக்கட்டும். இவற்றினிடத்தில் இடைச் செருகல் இருக்க முடியுமேயன்றி முற்றும் ஆரியம் என்று கூறவியலாது. ஆனால், அலங்கார சாத்திரம், அணியிலக்கணம் என்ற ஒன்று தமிழிலே நுழைந்தது. அது தமிழுக்குரிய தன்று. தமி ழிலக்கணத்தின் நிறைவைக் கெடுத்து - குறைவை வளர்த் தது. அதுவும் தொலையட்டும். ஆனால், பன்னிரண்டாம் நூற்றாண்டிலே 'பன்னிருபாட்டியல்' என்ற நூலொன்று தோன்றியது. பன்னிரண்டு பேர் எழுதியதாகச் சொல்லப் படுவது. பதின் மூன்று ஆசிரியர் பெயர் காணப்படும். நடையோ, ஒருவரே எழுதியதாகவே உள்ளதை அறிஞர் ஒப்புவர். தொல்காப்பியரின் மாணவரே அப்பன்னிருவரும் என்று கூறியிருக்கும். அந்த நூல் தோன்றிய காலமோ பன்னிரண்டாம் நூற்றாண்டு. அந்தப் பாட்டியலைப் பின் பற்றி வெண்பா பாட்டியல் என்ற நூலும் தோன்றிற்று. இவைகளிலே எழுத்திலும் சாதி வித்தியாசம் புகுத் தப்பட்டுள்ளது. நமது பழைய இலக்கணங்கள் எழுத்துக் களை, இயல்பு நோக்கி- உயிரென்றும், மெய்யென்றும்,உயிர் மெய்யென்றும், ஆய்தம் என்றும் பிரித்தன. அழகான, ஆராய்ச்சிக்குப் பொருந்துவதான பிரிவுகள் இவை. ஆனால் நமது பாட்டியலிலே, பன்னீருயிரும், முதலாறு மெய்யும் பிராமண எழுத்துக்கள், அடுத்தாறுமெய், க்ஷத்திரிய எழுத் துக்கள், அடுத்த நான்கு மெய் வைசிய எழுத்துக்கள், ழ, ள இரண்டும் சூத்திர எழுத்துக்கள் என்று பிரிக்கப்பட்டுள் ளன. சாதி வித்தியாச உணர்ச்சியைப் புகுத்தவும், உயர்வு தாழ்வு நிலைநாட்டப்படவும், இலக்கணமும் கருவியாவதா என்று கேட்கிறேன். உயிர் எழுத்துக்களின் இன்றியமை யாமையை உணர்ந்து, போதாக் குறைக்கு, பயன்மிக்க, ஆறு மெய்களையும் கூட்டி, பிராமண எழுத்துக்கள் என்று பெய ரிட்டு அடுத்தபடியாக - பிராமணர்களை விட - தாழ்ந்தவர்கள் க்ஷத்திரியர்கள் என்பதைக் காட்ட, ஆறு மெய்களை மட்டும் க்ஷத்திரிய எழுத்துக்கள் என்று பெயரிட்டு, நான்கினை வைசியர்களுடையதெனக் கூறி, இரண்டை, அவையும், -
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/41
Appearance