8 36 தனித்தமிழ் எழுத்துக்களை, ஆரிய மொழியில் காணப் படாத தமிழ்ச் சிறப்பெழுத்துக்களைச் சூத்திர எழுத்துக் கள் என்று கூறினர். ஆய்தத்தை, பஞ்சமருக் களித்திருக்க லாம். இதற்கு ஆரிய வர்ணாசிரமம் உடன்படவில்லை போலும். யண - - நால்வகைச் பாட்டியலில் இப்படி எழுத்துக்களைப் பிரித்திருந்தால் அதற்கு ஆரியத்தை வெறுப்பானேன் என்று சிலருக்குத் தோன்றலாம். முற்படைப்பினில் வேறாகிய சாதி இந் நாட்டினில்-நீர் நாட்டினீர் என்று ஆரியரை நோக்கிக் கபிலர் - தம் அகவலிலே கூறினார். அதையே, தமிழ் மொழி வரலாறு று' என்ற ஏட்டிலே, பரிதிமாற் கலை ஞன் என்ற தமிழ்ப் பெயர் பூண்ட தமிழறிஞர் சூரிய நாரா சாத்திரியார் எடுத்துக் காட்டியுள்ளார். அதைத் தான் - -பாட்டியலிலே எழுத்திலே சாதிப்பிரிவைப் புகுத்து மளவிற்கு ஆரியம் சூழ்ந்தது என்று நான் சொல்லுகிறேன். அதுமட்டுமன்றி, பாடல் வகையிலேகூட, உயர்ந்தவகை பிராமணருக்கு என்றும் - தாழ்ந்தது சூத்திரருக்கு என் றும் கூறப்பட்டுள்ளது. வெண்பா, பிராமணருக்கு, அக வல், அரசருக்கு, கலிப்பா, வைசியருக்கு, வஞ்சிப்பா-சூத் திரருக்குப் பாடவேண்டுமென்பது பாட்டியலின் கட்டளை. இந்தப் பாடல் வகைகளும், களும், இவைகளின் துறைகளும் கலந்து பாடப்படும் கலம்பகமானால், தேவருக்கு நூறு, பூதேவருக்குத் தொண்ணூற்றைந்து, அரசருக்குத் தொண் ணூறு, அமைச்சருக்கு எழுபது, வைசியருக்கு ஐம்பது என்று பாடப்படவேண்டுமாம். இவை, கலைபாகுமா என்று கேட்கின்றேன். கலைக் குரிமை வேண்டும் என் குரிமை வேண்டும் என்று கூறுகின்ற வர்கள் கலையிலே-இன்னின்னாருக்கு, இன்னின் கலை ; இந்த சாதிக்கு இது, அந்த வர்க்கத்திற்கு அது என்று கலையிலே சாதி வேற்றுமையைக் கட்டாயப்படுத்து வது நியாயமா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். கலைக்கு இருக்கவேண்டிய நியாயமான உரிமை, (அதாவது பொது உரிமை) கலையினாலேயே பறிக்கப்படுமேயானால் - அக் கலை ன் வகை
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/42
Appearance