உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/818

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதிய ஒளி

95. கயிற்றரவு

முதல் வெளியீடு : காதம்பரி, ஏப்ரல் 1948
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல்: கபாடபுரம் (மூலபாடம்)

திரு. பொள்ளாச்சி நசன் அவர்களிடம் உள்ள காதம்பரி தொகுப்பை 1997இல் பார்த்து மேற்படிச் செய்திகளைக் குறித்துக்கொண்டேன். இப்பதிப்புக்கென அதைப் பார்வையிட அணுகியபோது, திரு. நசன் அனுமதி மறுத்ததால் கபாடபுரம் நூலில் உள்ள பாடம் கொள்ளப்பட்டது.

96. 'இந்தப் பாவி'

முதல் வெளியீடு: தெரியவில்லை
புனைபெயர்: தெரியவில்லை
நூல்: சித்தி, ஸ்டார் பிரசுரம், 1955 (மூலபாடம்)

97. இலக்கிய மம்ம நாயனார் புராணம்

முதல் வெளியீடு: தெரியவில்லை
புனைபெயர்: தெரியவில்லை
நூல் : சித்தி, ஸ்டார் பிரசுரம், 1955 (மூலபாடம்)

98. சிற்றன்னை

முதல் வெளியீடு : காதம்பரி, ஏப்ரல்-மே 1949
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல்: சிற்றன்னை (மூலபாடம்)

99. அன்னை இட்ட தீ

மூலபாடம்: புதுமைப்பித்தனின் கையெழுத்துப் படி
நூல் : அன்னை இட்ட தீ
இதன் கையெழுத்துப் படியை ஒளிநகலெடுக்கக் கொடுத்த தொ.மு.சி. ரகுநாதன் வழங்கிய குறிப்பு (அன்னை இட்ட தீ, காலச்சுவடு பதிப்பகம், 1998, ப. 25-26):

1944-ஆம் ஆண்டில் புதுமைப்பித்தன் 'தினசரி'யிலிருந்து விலகி சினிமாத் துறையில் ஈடுபடுவதற்கு முன் எனக்கு அவரோடு நெருங்கிய நட்பு ஏற்பட்ட காலத்தில் நாவல்கள் எழுதத் தமக்கிருந்த வேட்கையையும் எண்ணங்களையும் பலமுறை என்னிடம் வெளியிட்டிருக்கிறார். அப்போது பட்டினத்தாரைப் பற்றித் தத்துவ விசாரம் மிக்க ஒரு நாவலை எழுத விரும்புவதாக ஒரு முறை தெரிவித்தார். பட்டினத்தார் துறவு மனப்பான்மையை மேற்கொண்ட போதிலும், மனைவி, மகன், தாய் ஆகியோர்மீது கொண்ட பாசத்தின் கயிறுகள் அவருக்கு லகுவில் அறுபடவில்லை. முதலில் மகன் மறைகிறான்; பின்னர் மனைவியை விட்டுப் பிரிகிறார். என்றாலும் இந்தப் பாசக் கயிறுகள் அறுபடாமையினால்தான் அவர் மனைவி மக்களைப் பழித்தும் இழித்தும் கசப்போடு பாடி அவற்றை அறுக்க முயல்கிறார். என்றாலும் அவர் தாயின் மீது கொண்ட பாசம் மட்டும் அறுபடவே இல்லை. அது அவளைச்

புதுமைப்பித்தன் கதைகள்

817