சிதையில் ஏற்றிய காலத்தில் புலம்பித் தீர்த்துப் பாடிய பாடல்களுக்குப் பிறகே அறுபடுகிறது. இந்தப் பாசக் கயிறுகள் அறுந்து அவரது மளம் விடுதலை பெற்ற பிறகுதான், அவருக்குக் கசப்பு ருசி கொண்ட பேய்க் கரும்பும் இனிக்கிறது. வாழ்க்கையின் இனிமையைப் புரிந்துகொண்ட பட்டினத்தார் அதற்கு மேல் உயிர் வாழ விரும்பாமல் சமாதியாகி விடுகிறார். இதுதான் பட்டினத்தாரைப் பற்றி அவர் எழுத விரும்பிய நாவலின் கரு.
இதேபோல், பட்டினத்தார் இறந்துபோன தன் தாயின் சிதைக்குத் தீ மூட்டிய காலத்தில் பாடியதாகக் கூறப்படும்
- முன்னை இட்ட தீ முப்புரத்திலே
- பின்னை இட்ட தீ தென்னிலங்கையில்
- அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
- யானும் இட்ட தீ மூன்சு மூள்கவே
என்ற பாடலில் காணப்படும் 'அன்னை இட்ட தீ' என்ற சொற்றொடரைத் தலைப்பாகக் கொண்டு, தாம் ஒரு நாவல் எழுதத் திட்டமிட்டிருந்ததையும் அவர் என்னிடம் கூறினார். ஆனால் இது பட்டினத்தாரைப் பற்றிய நாவல் அல்ல. மாறாக, தேசிய இயக்கத்தைப் பின்னணியாகக் கொண்ட, தேசிய மணமும் சிந்தனையாழமும், அற்புதமான கதாபாத்திரங்களும் நிறைந்த சிறந்ததொரு நாவலாக அதனை எழுத வேண்டும் என்பதே அவரது திட்டம் இந்தியத் தேசிய இயக்கம் வெகுஜன இயக்கமாக மாறத் தொடங்கிய காலத்திலிருந்து, இரண்டாவது உலக யுத்தமும் 1942 ஆகஸ்டு விடுதலைப் போராட்டமும் நிகழ்ந்த காலம் வரையிலும், அதாவது ஒரு தலைமுறைக் காலம் முழுவதையும் தமது நாவலுக்குரிய கால வரம்பாக அவர் கணித்திருந்தார். இந்தக் கால கட்டத்தில் தென்பாண்டி மக்களைப் பாத்திரங்களாகக் கொண்டு, அவர் தம் நாவலை எழுதத் திட்டமிட்டுச் செயலிலும் இறங்கிவிட்டார். அவர் அந்த நாவலின் முதல் இரண்டு அத்தியாயங்களை எழுதி முடிப்பதற்குள்ளாகவே, பல்வேறு வாழ்க்கைத் தொல்லைகள் அவரது கையையும் கருத்தையும் வேறுவகையில் செயலாற்றச் செய்துவிட்டன. இதன்பின் அவர் 1948இல் காலமாகும் வரையிலும், அந்த நாவல் எழுதி முடிக்கப் பெறாத தொட்ட குறைப் பிறவியாகவே நின்றுவிட்டது.
இந்த நாவலைப் புதுமைப்பித்தன் டெம்மி 1x8 புத்தக அளவில், ஒவ்வொன்றும் 32 பக்கங்களைக் கொண்ட 5 சிறு நோட்டுப் புத்தகங்களில் எழுதியிருந்தார். கையெழுத்துப் பிரதியில் அவர் நாவலின் தலைப்பு என்னவென்றும் எழுதவில்லை. எழுதிமுடித்த நோட்டுப் புத்தகங்களின் வரிசை எண்ணிக்கையையும் குறிப்பிட்டிருக்கவில்லை.
818
பின்னிணைப்புகள்