விசாலாக்ஷியின் ஏமாற்றம்
௧௯
”இங்கிலீஷ் தெரியுமா?” என்று பந்துலு கேட்டார்.
”தெரியாது” என்றாள் விசாலாக்ஷி.
”கொஞ்சங் கூட?” என்று கேட்டார்.
”கொஞ்சங்கூடத் தெரியாது” என்றாள்.
”ஸங்கீதம் தெரியுமா?” என்று பந்துலு கேட்டார்.
”எனக்கு நல்ல தொண்டை. என் பாட்டை மிகவும் நல்ல பாட்டென்று என் சுற்றத்தார் சொல்வார்கள்” என்று விசாலாக்ஷி சொன்னாள்.
”வீணை, பிடில், ஹார்மோனியம்—ஏதேனும் வாத்தியம் வாசிப்பாயா?” என்று பந்துலு கேட்டார்.
”ஒரு வாத்தியமும் நான் பழகவில்லை” என்றாள் விசாலாக்ஷி.
”தாளந் தவறாமல் பாடுவாயா?” என்று பந்துலு கேட்டார்.
”தாளம் கொஞ்சங்கூடத் தவறமாட்டேன்” என்று விசாலாக்ஷி சொன்னாள்.
”எங்கே? ஏதேனும் ஒரு பாட்டுப் பாடிக்காட்டு, பார்ப்போம்” என்று பந்துலு கேட்டார்.
அந்த சமயத்தில் சமையலறைக்குள் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவளாகிய வீரேசலிங்கம் பந்துலுவின் கிழமனைவி உள்ளேயிருந்து இவர்கள் பேசிக் கொண்டிருந்த கூடத்துக்கு வந்து ஒரு நாற்காலியின் மீது உட்கார்ந்தாள். அவளைக் கண்டவுடன், விசாலாக்ஷி எழுந்து நமஸ்காரம் பண்ணினாள். அவள் ஆசீர்வாதங் கூறி வீற்றிருக்க விடை கொடுத்து விசா-