உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மா. இராசமாணிக்கனார்
(1907-1967)

இலக்கியம், சமயம், வரலாறு கோயில் கலைகள், கல் வெட்டு இவற்றில் ஆழ்ந்த புலமையுடையவர். ஆய்வு நெறிமுறையிலும், அணுகு முறைகளிலும் புதிய சிந்தனைகளை விதைத்தவர். சாதி, சமயமற்ற சமுதாயத்தை உருவாக்கத் தம் எழுத்தாலும், பேச்சாலும் பாடுபட்டவர். மாந்த நேயமும், மொழி, நாடு இவற்றின் பால் தளராப் பற்றும் கொண்டு உழைத்து உயருமாறு இளைய தலைமுறையை ஆற்றுப்படுத்தியவர். இவருடைய ‘பல்லவர் வரலாறு’, ‘பத்துப் பாட்டு ஆராய்ச்சி’, ‘தமிழ் மொழி இலக்கிய வரலாறு’, ‘பெரிய புராண ஆராய்ச்சி’, ‘சைவ சமய வளர்ச்சி’ முதலிய நூல்கள் காலம் கடந்து நிற்கும் தகைமையன. எளிமையும், இனிமையும், உண்மையும், உழைப்புமே இவரது அடையாளங்கள்.

நன்றி : சாகித்திய அகாதெமி

பூம்புகார் பதிப்பகம்
127 (ப. எண் : 63). பிரகாசம் சாலை (பிராட்வே)
சென்னை - 600 108.
தொலைபேசி : 25267543

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/414&oldid=1756470" இலிருந்து மீள்விக்கப்பட்டது