உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

அறிஞர் அண்ணா


சரின்னோம். போச்சு, நம்ம அந்தஸ்தே போயிடும். இப்ப பணத்தைச் சேத்து நான் என்ன சாப்பிட்டுவிடவா போகிறேன். எவ்வளவு தான தருமம்! கோயில் காரியம்.

ந : ஆமாம்! ஆமாம்!

சீ : போன மாதம் தெரியுமா? புவனேஸ்வரி கோயில் இருக்கு பார். அதுக்கு இதுவரை தாசியே கிடையாது. அவளுக்கு ஏதாவது கோயில் மானியம் விட்டாத்தானே வருவா. இல்லை என்னிடம் குருக்கள் நடையா தடந்தாரு, அந்தப் பெண்ணும் வந்திருந்தா. சரின்னு, கோயில் மானியமாக ஒரு வேலி கொடுத்தேன். அவளுக்குப் பொட்டு கட்டியாச்சி. இப்படி எவ்வளவோ செலவு.

இந்த விலாசனி பாட்டு.......? அந்த ஜெகவீரன். இவளை யாரும் பார்க்காதபடி, ஒரு மாளிகையிலே வைத்திருக்கிறான். இப்போ. அவனே அவளை அழைத்துவரப் போகிறான். ஏன்? சும்மாவா அவன் தரவேண்டிய கடனைத் தள்ளி விடுவதாக ஒப்புக்கொண்டு விட்டேன்.

டே! மோட்டார் சத்தம் கேட்கிறது. ஓடு! ஓடு! சீக்கிரம் அவர்கள்தான்!

[வேலையாள் ஓடுகிறான். சீமான் ஆடையைச் சரிப்படுத்திக் கொள்கிறார். நண்பன், ஆசனங்களை அவசரமாகச் சரிப்படுத்துகிறான்.

ஜெகவீரனும் விலாசனியும் வருகிறார்கள். விலாசனி நமஸ்கரிக்கிறாள். சீமான் சொக்கிவிடுகிறார். வேலையாள் காப்பி கொண்டுவந்து வைக்கிறான். சீமான் காரணமில்லாமல் சிரிக்கிறார். ஜெகவீரனை, அமோகமாக உபசரிக்கிறார். வேலையாளை அதிகாரம். செய்கிறார். சந்தோஷத்தால் சீமான் தலைகால் தெரியாமல் ஆடுகிறார்.

தோட்டக்காரன் அங்கே வருகிறான் .. விலாசனி. பாட ஆரம்பிக்கிறாள். தோட்டக்காரன் வெளியே புறப்படுகிறான்.]