உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௭௪

சந்திரிகை

செய்துகொள்” என்று சொல்லிவிட்டுப் போன வார்த்தையில் அவளுக்கிருந்த நம்பிக்கையாலும், திடீரென்று பூகம்பமும் புயற்காற்றும் விளைவித்த, எதிர்பார்க்கப்படாத, கோர மரணப் பெருங்கோலத்தைக் கண்டும் பின் ஆவி பிழைத்ததனால் அவளுக்கேற்பட்ட பெரிய தைரியத்தாலும் அவள் தலை மயிர் வளர்க்கத் தொடங்கிவிட்டாள்.

தலைமயிர் வளர்த்துக் கொண்டே ஓரிரண்டு வருஷம் நாங்கனேரி அவளுடைய தாயுடன் பிறந்த மற்றொரு மாமன் வீட்டில் சந்திரிகையுடன் வந்து குடி யிருந்தாள். அந்த ஊரில் அந்தணர்கள் அவள் மீது அபாரமான பழிதூற்றத் தொடங்கிவிட்டார்கள். அந்தத் தூற்றுதல் பொறுக்க மாட்டாதபடியாலேதான் அவள் அவ்வூரை விட்டுப் புறப்பட்டு வழி நெடுகத் தீர்த்த யாத்திரை செய்து கொண்டு சென்னப் பட்டணம் வந்து சேர்ந்திருக்கிறாள். “இந்த ஊரில் எனக்குப் பழி பொறுக்க முடியவில்லை. மாமா, நான் காசிக்குப் புறப்பட்டுப் போய் கங்கைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்து நாளடைவில் என் பிராணனை விட்டு விடுகிறேன். எனக்கு வழிச்செலவுக்கு ஏதேனும் பணம் கொடும்; நான் அங்கே சென்று பிச்சையெடுத்து இந்தக் குழந்தை சந்திரிகையையும் காப்பாற்றி நானும் பிழைத்துக் கொள்கிறேன்“ என்று அவள் நாங்கனேரியை விட்டுப் புறப்படுமுன் தன் மாமனிடம் ப்ரார்த்தனை செய்து கொண்டாள்.

“இந்தக் குழந்தைக்கு விவாகம் பண்ணவேண்டிய