விடுதலை
௮௩
கடைசியாக ஸோமநாதய்யர் மாடியை விட்டுக் கீழே யிறங்கி வந்தார் அவர்:— “இந்தத் தர்க்கத்தின் விஷயமென்ன?” என்று கேட்டார்.
“ஒருமுறை ஜீவன் முக்தி பெற்றால் அது எப்போதைக்கும் சாசுவதம்தானா? மீட்டும் பந்தப் ப்ராப்தி ஏற்படுமா“ என்ற விஷயத்தைக் குறித்து விசாரணை செய்கிறோம் என்று குப்புசாமி தீக்ஷிதர் சொன்னார்.
“இந்த விஷயத்தில் தங்களுடைய அபிப்ராயமெப்படி?“ என்று சோமநாதய்யரை நோக்கி முத்துஸுப்பா தீட்சிதர் கேட்டார்.
“எனக்கு வேதாந்த விவகாரங்களில் பழக்கம் போதாது“ என்று ஸோமநாதய்யர் சொன்னார்.
திடீரென்று விசாலாக்ஷி அவர்களுக்கு முன்னே தோன்றி “ஜீவன் முக்தி இவ்வுலகில் ஸாத்தியமென்பதே பொய். நீங்கள் அதை யடைந்திருக்கிறீர்களோ? அடைந்தோர் யாரையேனும் பார்த்திருக்கிறீர்களோ?“ என்று கேட்டாள்.
“ஸ்வாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இருந்தார்; அவர் பெரிய ஜீவன் முக்தர் என்று ஸோமநாதய்யர் சொன்னார்.
★★★★
அன்று ஸாயங்காலம் முத்தம்மாளிடம் அனுமதிபெற்றுக் கொண்டு விசாலாக்ஷி சந்திரிகையுடன் மயிலாப்பூரிலிருந்து புறப்பட்டுப் பட்டணம் தங்கசாலைத் தெருவிலிருந்த மற்றொரு பந்துவின் வீட்டில் போய் இறங்கினாள். இந்த பந்து யாரெனில் விசாலாக்ஷியின் பெரிய தாயார் மகள். அந்த அம்மாள் பெயர்