உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௮௪

சந்திரிகை

பிச்சு. அவளுடைய புருஷனாகிய சங்கரய்யர் தங்கசாலைத் தெருவில் மிகவும் கீர்த்தியுடன் மிட்டாய்க் கடை வைத்துக் கொண்டிருந்தார். அதில் அவருக்குக் கன லாபம். அவர் கையில் தங்கக் காப்பு; வயிர மோதிரங்கள்; கழுத்தில் பொற்சரளி. அவருக்கு வயது முப்பதுக்கு மேலிராது, மிகவும் அழகான புருஷன். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவர் வீட்டுக்கு நம்முடைய விசாலாக்ஷி போய்ச் சேர்ந்தாள்.

அங்கு இவள் போன தினத்துக்கு மறுநாள் காசியிலிருந்து ஒரு பால ஸந்நியாசி வந்திருந்தார். இவர் ஜாதியில் தென்தேசத்துப் பிராமணர். ஆனால் பார்வைக்கு வட தேசத்தார்களைப் போலவே சிவப்பாகவும் புஷ்டியாகவும் உயரமாகவும் ஆஜானுபாஹுவாகவும் இருப்பார். மிகவும் அழகிய வடிவமுடையவர்.

இவருக்கு நாலைந்து பாஷைகள் நன்றாகத் தெரியும். இவர் ஸங்கீதத்தில் அபார வித்வான். இவர் தம்மை ஜீவன் முக்தி அடைந்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டார். எனினும், ஸதா இவருடைய முகத்தில் கவலைக் குறிகள் இருந்து கொண்டேயிருந்தன. மஹா மேதாவி. உலகத்து ஸாதாரண மூடபக்திகளை யெல்லாம் போக்கிவிட்டார். ஆனால், தீய விதியின் வசத்தால் தமக்குத் தாமே மானசீகமான பல புதிய மூட பக்திகளும் பொய்ப் பிசாசுகளும் உற்பத்தி செய்து கொண்டு ஓயாமல் அவற்றுடன் போராடிக் கொண்டிருந்தார்.