உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

என்று பேசுவது மடத்தனம், போக்கிரித்தனம், பைத்யகாரத்தனம் தேசத்துரோகம் என்று சுடுசொல் வீசுகிறார் நம் மீது. இதென்ன பைத்யக்காரத்தனமாக, புத்தி கெட்டதனமாக, துடுக்குத்தனமாக, சுப்பிரமணியம் வடநாடு தென்னாடு என்ற பேதம் தொனிக்கும்படி பேசினாராமே, என்று டில்லி கேட்க, அது கேட்டு ஏற்பட்ட அச்சத்தால் அமைச்சர் தாக்கப்பட்டு, “தாசனய்யா நான்! தர்ம துரைகளே! என்னைத் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம்! இதோ எண்ணிக்கொள்ளுங்கள் ‘தோப்புக்கரணம்’ போடுகிறேன்”—என்று டில்லியை நோக்கிக் கூறுவதாகத்தான் நமக்கு அவர் பேச்சுப் படுகிறது—நம்மை நிந்திப்பதாகக்கூடத் தெரியவில்லை.

நேர்மையில்லை, எனவே நெஞ்சிலே உறுதி இல்லை!

பற்றற்ற தன்மை இல்லை, எனவே பயமற்ற போக்குக்கொள்ள முடியவில்லை.

தெளிவும் இல்லை, துணிவும் எழவில்லை; தோத்தரித்துத் துதிபாடினால் துரைத்தனத்தில் பங்கு கிடைக்கிறதே, இதனை இழந்துவிடுவதா என்ற எண்ணம் குடைகிறது, வடநாடாவது, தென்னாடாவது பதவி, பதவி, பதவி! அது போதும்! அது இனிக்கிறது! சுவைப்போம், கிடைக்குமட்டும்!! என்ற திருப்தி ஏற்பட்டுவிடுகிறது; பதவியில் பதுங்கிக்கொள்கிறார்கள்.

இவர்களை எல்லாம் கூட விட்டுவிடு, தம்பி, விவேகத்தில் இவர் வசிஷ்டர், வைராக்யத்தில் விசுவாமித்திரர், தந்திரத்தில் சாணக்கியர், தத்துவார்த்த விவாதத்தில் குல்லூகபட்டர், என்றெல்லாம் புகழ்கிறார்கள் இராஜகோபாலாச்சாரியாரை! அவர் போக்கு என்ன?

இந்தி மொழிமீது அவர் போர் தொடுத்திருக்கிறார்! பேச்சளவில்!

ஆங்கிலத்தைக் கைவிடுவது முட்டாள்தனம் என்று பேசுகிறார்.

இது குறித்து அவர்தம் கருத்துகளைத் தெரிவிக்கும்போது முடுக்கும் மிடுக்கும் களிநடனம் புரிகின்றன! எதற்கும் அஞ்சேன்! எவருக்கும் தலைவணங்கேன்! என்று கூறிடும் கெம்பீரம் காண்கிறோம்.

ஆச்சாரியார், இந்தியைப் புகுத்தும் டில்லியின் போக்கைக் கண்டிக்கும் போக்கிலே, நூற்றிலே ஒரு பாகம், நாம் பேசினால், காங்கிரஸ் நண்பர்களுக்குக் கண்கள் சிவந்து விடும், மீசை துடிக்கும், கோபம் வெடிக்கும். அவர் ‘அனாயாச-