உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

மா. இராசமாணிக்கனார்


இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று
தெருமந்து சாய்த்தார் தலை; 25

தெரியிழாய்! நீயும் நின்கேளும் புணர
வரைஉறை தெய்வம் உவப்ப, உவந்து
குரவை தழீஇ யாம்ஆடக், குரவையுள்
கொண்டு நிலைபாடிக் காண்;
நல்லாய்! 30

நன்னாள் தலைவரும் எல்லை நமர்மலைத்
தம்நாண்தாம் தாங்குவார் என்நோற்றனர்கொல்?
புனவேங்கைத் தாது உறைக்கும் பொன்னறை முன்றில்
நனவிற் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ?
நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே, 35

கனவிற் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ?
விண்தோய் கல்நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர்போல் படர்கிற்பீர் மன்கொலோ?
பண்டு அறியாதீர்போல் படர்ந்தீர் பழங்கேண்மை
கண்டறியா தேன்போல் கரக்கிற்பென் மன்கொலோ? 40

மைதவழ் வெற்பன் மணஅணி காணாமல்,
கையால் புதைபெறூஉம் கண்களும் கண்களோ?
என்னைமன், நின்கண்ணால் காண்பென்மன் யான்;
நெய்தல் இதழ்உண்கண், நின்கண் ஆகு, என்கண் மன!
எனவாங்கு, 45

நெறியறி செறிகுறி புரிதிரிபு அறியா அறிவனை முந்துறீஇ
தகைமிகு தொகைவகை அறியும் சான்றவர் இனமாக
வேய்புரை மென்தோள் பசலையும், அம்பலும்,
மாயப்புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்கச்
சேய்உயர் வெற்பனும் வந்தனன்; 50

பூ எழில் உண்கணும் பொலிகமா இனியே."

ஆற்று வெள்ளத்தில் எங்களோடு சேர்ந்து ஆடி மகிழ்ந்த உன் மகள், வெள்ளத்தின் விசையால் கால் வழுக்கி விடவே, கண்களை மூடிக்கொண்டு, வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்பட்டாள். அப்போது ஆங்கு வந்த ஓர் இளைஞன், இயல்பாக உள்ள அருள் குணத்தால் மார்பில் அணிந்திருந்த சுர புன்னை மலர் மாலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/119&oldid=1760634" இலிருந்து மீள்விக்கப்பட்டது