இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
104
தொகை எவ்வளவு என்பதுதான், எனக்குத் தேவை! மன்னித்துவிடு, தம்பி! எனக்கு, என்று எக்களிப்பில் கூறிவிட்டேன்— நாட்டுக்குத் தேவை.
விடுதலை கேட்கும் எம்மை சிறைக்கு இழுத்துச் செல்லும்போது, அந்தச் சிறையில்—எத்தனை M. P.க்கள் எத்தனை M. L. A.க்கள் இருக்கவேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருக்கிறதோ, அந்த அளவுக்கு தேர்தலிலே வெற்றி தேடிக் கொடுங்கள். பொட்டிட்டு ஆர்த்தி எடுத்தி, போய்வருவாய் களம் நோக்கி! என்று வழி அனுப்பி வைப்பதுபோல நாட்டு மக்களே! நல்லோர்களே! நீண்டகாலச் சிறை அழைக்கிறது! அங்கிருந்து தூக்கு மேடைக்கும் இழுத்தேகலாம்! உங்கள் ஆதரவைத் தந்து, வழியனுப்பி வையுங்கள்; தேர்தலிலே நீங்கள் தேடித்தரும் வெற்றி, களம் செல்லும் வீரருக்குத் திலகம் இட்டு அனுப்புவது போன்றது என்பதைத், தம்பி! இன்றே கூறவிடு, எதற்கும் தயாராகிவிடு!!
20-8-61
அண்ணன்,
அண்ணாதுரை