உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

கடிதம்: 143

பட்டப் பகலில்...! (2)

நினைவு மறத்தல்—
இட்லரின் போர்முறை—
கனவு நனவாதல்

தம்பி!

சென்ற கிழமை, தொட்டிலில் படுத்துத் துயிலும் தன் மகவு குறித்துத் தாய் காணும் கனவுபற்றி எழுதியிருந்தேன்; மேலும் எழுதுவதாகவும் வாக்களித்திருந்தேன்.

உனக்குக் கடிதம் எழுதி முடித்த பிறகு தொடங்கிய சுற்றுப்பயணம். சற்றுக் கடுமையானது, தம்பி! ஆனால், தவிர்க்கவே முடியாத, தவிர்க்கக்கூடாத நிகழ்ச்சிகள்; எனவே, இந்தக் கிழமை உனக்குக் கடிதம் எழுதத் தொடங்கும்போது உள்ளபடி அலுப்புத்தான்—ஆயினும், அதைப் போக்கிக் கொள்ளக்கூட உன்னுடன் உரையாடுவது மெத்தப் பயன்படும் மாமருந்தல்லவா!!

ஒவ்வொருவருக்கு, அவ்வப்போது ஏற்படும் நினைவுகளே கூடச் சிறிது போதில் கலைந்தும், சிதறியும், சிதைந்தும், குறைந்தும் போய்விடுகிறது, அறிவாய்.