உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

பாரதியார் கதைகள்

“என்ன ஐயரே, விறைப்பிலே கேட்கிறீரே?” என்றான் செட்டி.

“சாதாரணமாகத் தான் கேட்டேன்“ என்றான் பார்ப்பான்.

செட்டி சொல்லுகிறான்:— ஐயரே, போய் ஒரு வாரங்கழித்துத் திரும்பி வாரும். அப்போது அவசியமானால் சொல்லுகிறேன்.”

அதற்குப் பார்ப்பான்:—“செட்டியாரே, அவசியமாக இருந்தால் தாங்கள் சொல்லியனுப்பவேண்டும். நானாக வர சௌகர்யப்படாது“ என்றான்.

செட்டி கடகட வென்று நகைத்தான். பிறகு சொல்லுகிறான்: “ஐயரே, கொஞ்சம் இலேசாக அடக்கும். நமக்குப் பார்ப்பார் கிடைப்பது கஷ்டமில்லை காணும். உமக்குச் செட்டி கிடைப்பது கஷ்டம்“ என்றான்.

“ஐயரே, போய் வாரும்“ என்று செட்டி சொன்னான். இவன் சரியென்று வீட்டுக்கு வந்துவிட்டான். நாள் இரண்டாயின. மாணிக்கஞ் செட்டிக்கு ஒரு பெரிய சங்கடம் வந்து சேர்ந்தது. அவனுக்கு ஒரு மைத்துனன். அந்த மைத்துனன் பெயர் தட்டிக் கொண்டான் செட்டி. இவனை மாணிக்கஞ் செட்டி தனது காரியஸ்தனாகத் தஞ்சாவூரிலே வைத்திருந்தான். தஞ்சாவூரில் மாணிக்கஞ் செட்டிக்கு ஒரு கடையும் கொஞ்சம் கொடுக்கல் வாங்கலும் உண்டு. தட்டிக் கொண்டான் செட்டி நஷ்டக் கணக்குக் காட்டுவதிலே புலி. ஒரே அடியாகப் பெரிய தொகையை அழுத்திக்கொண்டு கணக்குக் காட்டிவிட்டான். அந்த நஷ்டக் கணக்கு மாணிக்கஞ் செட்டிக்கு வந்தது. ஓலையை விரித்து வாசித்துப் பார்த்தான். வயிறு பகீ ரென்றது.

“கெடுத்தானே பாவி! கெடுத்துப் போட்டானே! இனி என்ன செய்யப் போகிறோம்“ என்று மிகவும் துன்பப்-