உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

மா. இராசமாணிக்கனார்


அவன் ஊர் நோக்கிப் புறப்பட்டான். தோழி, அதை, அவளுக்குக் கூறியது இது:

"அகவினம் பாடுவாம் தோழி! அமர்க்கண்,
நகைமொழி நல்லவர் நாணும் நிலைபோல்
தகைகொண்ட ஏனலுள் தாழ்குரல் உரீஇ,
முகைவளர் சாந்துஉரல், முத்தார் மருப்பின்
வகைசால் உலக்கை வயின்வயின் ஓச்சிப், 5

பகையில் நோய் செய்தான் பயமலை ஏத்தி
அகவினம் பாடுவாம் நாம்.
ஆய்நுதல், அணிகூந்தல், அம்பணைத் தடமென்தோள்,
தேனாறு கதுப்பினாய்! யானும்ஒன்று ஏத்துகு,
வேய்நரல் விடரகம் நீஒன்று பாடித்தை 10

கொடிச்சியர் கூப்பி வரைதொழு கைபோல்
எடுத்த நறவின் குலையலம் காந்தள்
தொடுத்ததேன் சோரத் தயங்கும், தன்உற்றார்
இடுக்கண் தவிர்ப்பான் மலை.
கல்லாக்கடுவன் கணம்மலி சுற்றத்து 15

மெல்விரல் மந்தி குறைகூறும் செம்மற்றே,
தொல்லெழில் தோய்ந்தார் தொலையின், அவரினும்
அல்லற் பாடுவான் மலை.
புரிவிரி புதைதுதை பூத்ததைந்த தாழ்சினைத்
தளிரன்ன எழில்மேனி தகைவாட நோய்செய்தான் 20

அருவரை அடுக்கல் நாம் அழித்து ஒன்று பாடுவாம்,
விண்தோய் வரைப் பந்து எறிந்த வயா விடத்
தண்தாழ் அருவி அரமகளிர் ஆடுபவே;
பெண்டிர் நலம் வௌவித் தண்சாரல் தாதுஉண்ணும்
வண்டில் துறப்பான் மலை. 25

நடுங்கா எழில்வேழம் வீழ்பிடிக்கு உற்ற
கடுஞ்சூல் வயாவிற்கு அமர்ந்து நெடுஞ்சினைத்
தீங்கண் கரும்பின் கழைவாங்கும், உற்றாரின்
நீங்கலம் என்பான் மலை.
எனநாம், 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/123&oldid=1761964" இலிருந்து மீள்விக்கப்பட்டது