71
ஏகாம்: என் கலக்கத்துக்குக் காரணம் தெரியாமல் திகைக்கிறாய், தேவி! நானோ, உன் மனம் என்னமோ, துள்ளி விளையாடுகிறது என்று கூறினாயே, அந்தக் களிப்புக்கு என்ன காரணம் என்று அறியாமல், திகைக்கிறேன். பேதைப் பெண்ணே! சிந்தித்தால் சித்தம் குழம்பும் சம்பவம் நடந்திருக்க, நீ, சிறுகுழந்தைபோல, ஆடிப்பாடி அகமகிழ்கிறாய். வா வா, இமயவன் மகளே! நீ, சிந்தனைத் திறத்தையே இழந்துகொண்டு வருகிறாய். நாம், இழிவு செய்யப்படுகிறோம், கேலிக்கு ஆளாக்கப்படுகிறோம், வீணரின் விளையாட்டுக் கருவிகளாக்கப்பட்டிருக்கிறோம். இந்த விபரீதத்தைப் பற்றித் துளியாவது, எண்ணிப் பார்த்தால், விசாரத்தில் ஆழ்ந்து போவாய்.
உமா: நாதா! என்ன வார்த்தை பேசுகிறீர்கள். பொருள் விளங்கவில்லையே! பித்தா என்று பக்தர்கள் உம்மை அழைப்பது, நிந்தாஸ்துதி என்பீர்களே, அல்ல, அல்ல, நிஜமான வார்த்தையே அது. சித்தம் தடுமாறிப் பிதற்றுகிறீரே! நம்மையா, கேலி செய்தார்கள்! யார் அத்தகைய ‘சண்டாளர்கள்?’ நேற்று நமக்கு நடைபெற்ற ராஜோபசாரத்தைக் காணாத கயவர்களா அவர்கள்! இலட்சோப லட்சம் மக்கள் புடைசூழ, நவரத்னங்கள் விண்ணிலிருந்து பொழிவதுபோல, வாண வேடிக்கையும், நந்தியின் முகம் வெட்கத்தால் சிவந்துவிடச் செய்யும் அளவுக்கு, வெடி வேட்டும், உடனிருக்க, பக்தகோடிகள், வாழ்த்த, அழகிய, அலங்கார மிக்க, வெள்ளி ரதத்திலே, நாம் வீற்றிருந்து, வீதிவலம் வந்த காட்சி இன்னமும், அடியாரின் மனக் கண்ணில் தோன்றிய வண்ணம் இருக்கிறதே! முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் காஞ்சியம்பதியிலே, பல இலட்ச ரூபாய் செலவிலே, நமக்காக வெள்ளிரதம் செய்து, விழாக்-