உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

350,000 பவுன்‌, கட்டாயக்கடனாகத்‌ தந்தாக வேண்டும்‌ என்று தாக்கீது பிறப்பித்தான்‌. நெறி தவறத்‌ தொடங்கிய மன்னன், தவறான பாதையில்‌ வேகமாகச்‌ செல்கிறான் என்பதை இது விளக்கிற்று — கட்டாயக்‌ கடன் என்பதற்கும்‌ அடித்துப்‌ பறிப்பதற்கும்‌ சொல்லளவிலன்றி, பொருளில்‌ என்ன வித்தியாசம்‌. நீதிமன்றம்‌ இந்த முறை சட்டத்திற்கு விரோதமானது என்று தீர்ப்‌பளித்தது! “அப்படியா! யார்‌ அந்தத்‌ தீர்ப்பளித்தது? சர்‌. ரண்டால்க்கு எனும்‌ முதல்‌ நீதிபதியா? சரி, அரச ஆணையை அவமதித்த குற்றத்துக்காக, அவரைப்‌ பதவியிலிருந்து நீக்கி விட்டோம்‌” என்றான்‌ மன்னன்‌. கொடுங்‌கோலன்‌, காட்சி அளிக்கிறான்‌, என்றாகிவிட்டது நிலைமை. கட்டாயக்‌ கடனுக்கு, நாடெங்கும்‌ பலத்த எதிர்ப்பு. படைகொண்டும்‌, சிறையில்‌ தள்ளியும்‌, உருட்டியும்‌ மிரட்‌டியும், கட்டாயக்‌ கடனை வசூலித்தனர் — கண்டனம்‌ அலை அலையாகக்‌ கிளம்பிற்று! மன்னனை, இனி, நாடு தாங்காது, என்பது புரியலாயிற்று. மாமன்ற உறுப்‌பினர்கள் மக்களிடம் நாட்டு நிலைமையையும்‌ மக்கள் கடமையையும்‌ எடுத்துரைத்தனர்‌. உரிமையைப்பெற, எந்த அளவு செல்லவும்‌ தயாராக இருப்பதை மக்கள் உணர்த்தினர்‌.

மன்னனுடைய சொந்த நிலங்கள்‌ ஈடு காட்டப்பட்டு, கடன்‌ வாங்கப்பட்டது. நிர்வாக ஊழல்‌, எவ்வளவு பணத்தையும்‌ கரைத்தபடி இருந்தது. மன்னன் திகைத்தான்‌ — ஒரு யோசனை உதித்தது. கப்பல்‌ வரி ஒன்றை விதித்தான்‌.

ஆபத்து நாட்டை நோக்கி இருக்கும்போது, மன்னர்‌கள்‌, முன்னாளில்‌, துறைமுகப் பட்டணங்களில்‌, கப்பல்வரி வசூலிப்பதுண்டு; அதைக்கொண்டு கலங்கள்‌ கட்டி, நாட்டைக்‌ காப்பாற்றும்‌ நோக்குடன்‌. சார்லஸ்‌ மன்னன்‌