92
இதற்கு ஏன் பயப்பட வேண்டும்...ஓஹோ! இவ்வளவு பூஜையை ஏற்றுக்கொண்டும் எங்கள் கஷ்டத்தைப் போக்காமலிருக்கிறாயே கருப்பண்ணசாமி!—என்று அந்த பக்தர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்ற பயமா?” என்றார் தேவி.
கருப்பண்ணர், “போதும் தேவி உன் தொல்லை. வரம் தந்து அவர்களின் குறையைப் போக்கவில்லை என்பதற்காக என்மீது சீறுவார்கள் என்ற பயம் எனக்கு இல்லை —நானென்ன தேவாலய அரசு செலுத்தி அனுபவமில்லாதவனா...இங்கு இல்லாவிட்டால், மேலுலகில் என்னைப் பூஜித்த பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் எண்ணிக்கொள்வார்கள், இங்கே அவர்களுக்குள்ள குறையைத் தீர்த்து வைக்காததற்காக என்மீது சீறமாட்டார்கள் என்ற சித்தாந்தம் எனக்கும் தெரியும். நான் பயப்பட்டது அதனால் அல்ல” என்று பெருமூச்சு வருமளவு வேகமாகப்பேசினார் கருப்பண்ணசாமி.
தேவியார் வேகமாகச் சென்று, வாயிலில் பார்த்துவிட்டு வந்து, “கருப்பண்ணா! பக்தர் யாருமல்ல, காற்று பலமாக அடித்ததால் மணி ஓசை கேட்டது. பயப்படாதே. சரி, பக்தர்கள் வருகிறார்கள் என்றால் ஏன் பயம் உண்டாகிறது உனக்கு-அதைச் சொல்லு” என்று கேட்டார்கள். பக்தர் யாரும் வரவில்லை என்று தெரிந்ததால் தைரியம் பெற்று, தன் பீடத்தில் அமர்ந்து, எதிரே ஒரு பீடத்தில் அமர்ந்த தேவியிடம் கருப்பண்ணசாமி, விளக்கம் கூறலானார்.
“தேவி! பக்தர்களால் எனக்கு ஏற்பட்ட ஆபத்தும் சங்கடமும், உனக்கு என்ன தெரியும்! வர வர இந்த ‘வேலை’யிலேயே எனக்கு வெறுப்பு வளர்ந்துகொண்டு வருகிறது. தான் செய்த மோசத்தை அரைப் பலம் கற்பூரப் புகையிலே மறைத்துவிடலாம் என்று எண்ணுகிறான். இவனுடைய பேராசைக்கு நான் துணை செய்ய வேண்டும் என்று எண்ணு-