உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

தான் நான் செய்த தவறு. போதும் புளுகாதீர்கள் என்று ஒரு தடவையாவது, ஒரு பக்தனையாவது கண்டித்திருந்தால் அவர்களுக்கு அன்று அவ்வளவு துணிவு வந்திருக்காது” என்றார் கருப்பண்ணர்.

“உன்னை ஒரு தனி இடத்தில் போட்டுப்பூட்டவேண்டிய அவசியம் என்ன வந்தது?” என்று மீண்டும் கேட்டார் தேவியார்.

சலிப்பும் வெறுப்பும் கலந்த குரலிலே கருப்பண்ணர் சொன்னார். “ஏன் பூட்டி வைத்தார்கள் என்றா கேட்கிறீர், தேவீ! நான் அவர்களின் “சாமி”யாம். அதனாலே என்னை வேறே சில பக்தர்கள் கொண்டு போகாமலிருப்பதற்காக, என்னைப்போட்டுப் பூட்டி வைத்தார்கள். அவ்வளவு ‘பக்தி’ என்னிடம், வேறு எந்த பக்தனிடமும் நான் பேசிவிடக்கூடாது. அப்படி ஒரு எண்ணம்—” என்றார் கருப்பண்ணர்.

“இதென்ன பைத்தியக்காரத்தனமான எண்ணம்!”—என்று தேவி கேலியாகப் பேசினார்கள். “இவர்கள் கண்டதையும் கடியதையும் வேகாததையும் பழுக்காததையும் தின்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், என்னை வந்து கேட்கிறார்களே, தேவி! கருப்பண்ணஸ்வாமி என்னைக் காப்பாற்று என்று. பைத்தியக்காரத்தனம்தானே அது. அதுபோல இதுவும் ஒரு பைத்யக்காரத்தனம். உண்மையைச் சொல்லப் போனால், தேவீ! அப்படிப்பட்ட பைத்யக்காரத்தனத்தை நாம் வளரவிட்டது தவறு இல்லையா? என் விஷயத்தைக் கேள் தேவீ! இந்த பக்தர்களுக்கு நான் தங்களுடைய “சாமி”, வேறு யாரும், தங்களுடையதென்று பாத்யதை கொண்டாடினாலும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்கிற எண்ணம் ஏற்பட்டது. அதற்குத் தகுந்தபடியான நிலைமையும் ஏற்பட்டுவிட்டது. நான், நீ என்று போட்டி போட்டுக்-