________________
19 கொண்டு கையெழுத்துப் போட்டுவிட்டான் என்றுதான் பேச்சு! பேச்சா! இடிமுழக்கம்! பெரியாரின் பேருரை! கேலிப்படம்! கடாவுதல்! எல்லாம்!! தெரிந்த வித்தை அவ்வளவும்!! மறுநாளும் எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத் தது சட்டசபையில். "நம் நிதி அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள், நான் கையெழுத்துப் போட்டுவிட்டதாகச் சொன்ன தாக நான் பத்திரிகையில் பார்த்தேன்" (நான்) "நான் எந்தக் கூட்டத்திலும் கையெழுத்துப் போட்டதாகச் சொல்லவில்லை" (அமைச்சர் சுப்பிரமணியம்) 'நிதி அமைச்சர் சொன்னதாகப் பத்திரிகையில் வந்தது. பத்திரிகையிலே வந்தது மட்டுமல்ல; நேற்றைய தினம் பேசிய கனம் அங்கத்தினர் அனந்த நாயகி அவர்கள் கையெழுத்துப் போட்டுவிட்டு இப் போது இல்லையென்று சொல்கிறாரே என்று ஆழ்ந்த வருத்தத்தோடு கேட்டார்" (நான்)
- "திருத்திக்கொண்டேன் என்பதைக் கனம் அங்கத்தினர் அவர்கள் தெரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்"
(கனம் அனந்தநாயகி அம்மையார்) புகார் கிளப்பிய இதழ்கள், அது பொருளற்றது என்பதை விளக்கிடும் சட்டசபை நிகழ்ச்சியை எடுப்பாக வெளி யிட்டனவா? இல்லை! அதற்கா அவை? இட்டுக் கட்டு களோ இருப்பதை மறைப்பவைகளோ இவைகளுக்கு இடம் கொடுத்தாகிலும் என்னைக் குறைகூற எண்ணு பவர்களுக்கு இடம் நிறைய! இந்த 'இட்டுக்கட்டு' கூட, எனக்கு ஒரு சாதகமாக அமைந்தது. உண்மை விளங்கச் செய்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது மட்டுமல்ல; மொழி விஷயமாக கழகக் கொள்கை எது என்பதனைச் சரியான முறையில் பதிவு செய்துகொள்ளவும் வழி கிடைத்தது. 1958 மார்ச் 11-ம் நாள் அதற்கான வாய்ப்புக் கிடைத்தது.