உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மாண்புக்காகவும்‌ போரிட்டவர்களைச்‌ சிறையிலே தள்ளினான்—மக்களைச் சோகக் கடலிலே தள்ளிவிட்டான்‌—எதேச்சாதிகார ஆட்சியை எதிர்த்து நின்று நமக்காக வாதாடும்‌ நேர்மைஉள்ளம்‌ பெற்றவர்களை, கொடுஞ்சிறையிலே தள்ளிவிட்டானே மன்னன்‌. முறைப்படி நடக்க வேண்டும்‌, நெறி அறிந்து ஒழுகவேண்டும்‌, என்று பேசியதா குற்றம்‌! மக்கள்‌ சார்பாகப்‌ பேசுவதற்கா கடும்‌ தண்‌டனை. எலியட்‌ செய்த குற்றம்‌ என்ன? பொதுப்‌ பணத்‌தைச்‌ சூறையாடினானா! போகபோக்கியத்தில்‌ மூழ்‌கினானா! பக்கிங்காமா? உற்றார்‌ உறவினர்களுக்கு வேலை வாங்கித்‌ தந்தானா! தனக்காகவா பணியாற்றினான்‌? மக்களுக்காக அல்லவா! கிழக்கிந்தியக்‌ கம்பெனியாரிடமிருந்து பெரும்‌ பொருள்‌ கைக்கூலி பெற்றுக்கொண்ட பக்கிங்காம்‌, அரச சபையின்‌ மணியானான்‌! அக்ரமம்‌ தாங்காமல்‌, யாரோ ஒருவன்‌ அவனைக்‌ கொன்றுதீர்த்தான்‌—மன்னன்‌ அவனை உற்ற தோழனாக அல்லவா கொண்டிருந்தான்‌! நமக்காகப்‌ பாடுபடும்‌ பிம்‌, ஹாம்டன்‌, எலியட்‌ போன்றாருக்குச்‌ சிறை! என்ன அக்ரமம்‌! எவ்வளவு அநீதி! என்று மக்கள்‌ கொதித்துப்‌ பேசினர்‌, துயருற்றனர்‌. சிறையில்‌ தள்ளப்‌பட்டால்‌ சித்தம்‌ குழம்பிவிடுமா, கொண்ட கொள்கையைவிட்டுக்‌ கொடுத்துவிடுவேனா, அறப்போர்‌ நடாத்த முடியும்‌, அஞ்சேன்‌, அஞ்சேல்‌! என்று எலியட்‌ கூறிவிட்டுச்‌ சிறையில்‌ வாடிக்கிடந்தான்‌, மக்கள்‌ மனதிலே இடம்‌ பெற்றுவிட்ட எலியட்‌, சிறையிலேயே இறந்துபட்டான்‌—கொள்கைக்காக உயிரை இழந்த அந்த உத்தமனுடைய மறைவு, மக்கள்‌ உள்ளத்தை உலுக்கிவிட்டது. இரண்‌டாண்டுக்‌ காலம்‌ சிறைக்‌ கொடுமைக்காளாகி, எலியட்‌ 1631ல்‌ சிறையிலேயே இறந்துபட்டான்‌.

நச்சுத்தத்துவம்‌, நச்சரவுபோன்ற நண்பர்குழாம், நாடு ஏற்க மறுக்கும்‌ மார்க்க மாறுதல்கள்‌, வீண்‌ குழப்ப-