உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 அரசியலில் புகுந்து இருக்கிற இந்த நேரத்தில். எல்லாதரப்பட்ட கருத்துக்களையும் கேட்டு அதன்மூலம் எங்கள் கருத்துக்களை செம் மைப்படுத்திக்கொள்ள தயாராயிருக்கிறோம் சிலர், இந்தகட்சியின் பெயர் மாற்றப்பட வேண்டுமென்று எடுத்துச் சொன்னார்கள். சிலர், பெயரை மட்டும் மாற்றினால் போதாது. இந்தக் கட்சியை அடியோடு அழித்து விடவேண்டுமென்றும் சொன்னார்கள். இன்னும் சிலர், இந்த கட்சி தனியாக இருப்பானேன் தோளோடு தோள்சேர்ந்து எங்களுடைய பக்கம் நிற்கலாமே என்றும் சொன் னார்கள். தோளோடு தோள் சேர்ந்து நிற்கலாமென்று சொன்ன நேரத்திலே, நான் முதலமைச்சர் அவர்களைத்தான் பார்த்தேன். அவரும் நானும், தோளோடு தோள் சேர்ந்து நிற்பது இயற்கை யிலேயே 'முடியாத காரியம் (சிரிப்பு). ஆனால் கை கோர்த்துக் கொண்டு செயலாற்ற முடியும் உருவத்தைப் பற்றிய மட்டிலும் நான் சொல்லவில்லை. உள்ளப் பாங்கைப் பொறுத்தவரையில் பல் வேறு கட்சிகள் தோளோடு தோள் சேர்ந்துப் பணியாற்ற முடியாது. கைகோர்த்துக்கொண்டு பணியாற்றலாம். ய கவர்னர் பெருமகனாரின் பேருரை ஆட்சியாளர்கள் இனி செய்யப்போகின்ற காரியங்களையும் கடைப்பிடிக்க இருக்கின்ற கொள்கைகளின் விளக்கத்தையும் உள்ளடக்கியதாக இல்லாமல் இருப்பது உண்மையில் பெரும் குறையே என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பொதுவாக ஆட்சியாளரின் கொள் கைத் திட்டங்களை விளக்குவதே கவர்னருடைய பேருரை என் பதும், அக்கொள்கை திட்டங்களுக்கு ஏற்ப நிதியை பகிர்ந்தளிப் பதாகிய புள்ளி விவரங்களைக் கொண்டதே வரவு செலவு திட்டம் என்பதும் தான், நான் அறிந்துள்ள வரையில் உணர்ந்து இருக் கிறேன். ஆனால் கவர்னர் பேருரையில் குறிப்பிடவேண்டிய கொள்கை விளக்கங்களை நிதி அமைச்சர் அவர்களுடைய வரவு செலவு திட்டப் பிரசங்கத்திற்கு கவர்னர் ஒதுக்கிவிட்டது பெரும் குறை எனச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஆனால் நம் நாட்டிலுள்ள வேறு சில காட்சிகளைப் புள்ளி விபரங்களோடு எடுத்துக் காட்டியுள்ளார் கவர்னர். அவர் கொடுத்திருக்கிற பன்னீராயிரத்து ஐநூறு பம்புசெட்டுகளும் தேவையில்லை என்று சொல்லிவிட வில்லை. ஆனால் கவர்னர் பெருமகனார் இந்தப் பொலி காளைகள் மூலமாகவும், பம்புசெட்டுகள் மூலமாகவும், கிராமாந் தரங்களுக்கு மின்சாரத்தைப் பரப்புவதன் மூலமாகவும் என்ன என்ன மாதிரியான திட்டங்களை இந்த சர்க்கார் செய்யப் போகிறார்