உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாம்பல்

47

துக் கூறும் ஆற்றலையும் படைத்த பரஞ்ஜோதியாரின் துணையை இழந்தது; ஒளியிழந்த மணிபோல், கூர் இழந்த வாள்போலாயிற்று பல்லவநாடு. இதனை மக்கள் உணரக் கொஞ்ச காலம் பிடித்தது. ஆனால், உணர்ந்தனர்—பல ஆண்டுகளுக்குப் பிறகு.

“சாளுக்கிய படை வருகிறதாமே!”

“படை பெரிய அளவாம்—மிக வீரமாகப் போராடும் படையினராம்.”

“ஆமாம்! ஆனால் என்ன! நாமென்ன, படைபலமற்ற நாட்டிலேயா வாழ்கிறோம். நரசிம்மப் பல்லவனின் திருக்குமரனிடம் தேர்ச்சிபெற்ற படை இருக்கிறது. கவலை ஏன்?”

“படை இருக்கிறது—பெரும்படைதான்—ஆனால் பரஞ்ஜோதி இல்லையே! பரஞ்ஜோதி இல்லை என்ற தைரியத்தாலல்லவா, வாதாபி தரைமட்டமானதைக் கண்டு கலங்கிய சாளுக்கியர், மீண்டும் தலைதூக்க—நமது நாட்டின் மீது போர்த்தெடுக்கத் துணிந்தனர்.”

“பரஞ்ஜோதி இன்று இருந்தால்...”

“பரஞ்ஜோதி இல்லையே.”

“பரஞ்ஜோதியை இழந்த பிறகு, நமக்கு வெற்றி ஏது...”

கலங்கிப் பேசினர், காஞ்சிபுரத்து அரசு. அவையினர், இதுபோல். அவசர அவசரமாக, அணிவகுப்புகள் தயாராயின. முரசுகள் ஆர்ப்பரித்தன! ஆயுத ஒலி கிளம்பிற்று; நால்வகைச் சேனை கிளம்பிற்று; பாய்ந்துவரும் சாளுக்கியப் படையைத் தடுக்க, எல்லம் இருந்தது. ஆனால் மக்கள் மனதிலே நம்பிக்கை எழவில்லை. ஏனெனில், களத்திலே நின்று படைகளை நடத்திச் செல்ல பரஞ்ஜோதி இல்லை—படைத்தலைவர் பரஞ்ஜோதிதான் மடத்தலைவர் சிறுத் தொண்டரானாரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/47&oldid=1766545" இலிருந்து மீள்விக்கப்பட்டது