132
மா. இராசமாணிக்கனார்
வருடை மான் குழவிய வளமலை நாடனைத்
தெருளத், தெரிஇழாய்? நீஒன்று பாடித்தை!
15
நுண்பொறி மான்செவி போல வெதிர்முளைக்
கண்பொதி பாளை, கழன்றுஉகும் பண்பிற்றே,
மாறு கொண்டு ஆற்றார் எனினும், பிறர்குற்றம்
கூறுதல் தேற்றாதோன் குன்று?
புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட
20
புணர்மருப்பு எழில்கொண்ட வரைபுரை செலவின்
வயங்குஎழில் யானைப் பயமலை நாடனை,
மணம் நாறு கதுப்பினாய்! மறுத்துஒன்று பாடித்தை:
கடுங்கண் உழுமை அடிபோல வாழைக்
கொடுங்காய் குலைதொறூஉம் தூங்கும், இடும்பையால்
25
இன்மை உரைத்தார்க்கு, அது நிறைக்கல் ஆற்றாக்கால்
தன்மெய் துறப்பான் மலை!
எனவாங்கு,
கூடி அவர் திறம்பாட, என் தோழிக்கு
வாடிய மென்தோளும் வீங்கின,
30
ஆடமை வெற்பன் அளித்தக்கால் போன்றே."
தோழி: வேங்கைப் புலியைக் குத்திக்கொன்ற வெறிபிடித்த வேழத்தின் கொம்பாலும், தேன் வண்டு மொய்க்கும் சந்தன மரத்தாலும் ஆன உலக்கைகளால், மூங்கில் நெல்லைப் பாறை உரலில் இட்டுக் குற்றும் நாம், முருகனைப் பாடுவதுபோல், மலைநாடனாகிய நம் தலைவனைத் தையலாய்! பாடுவோம்! வா.
தலைவி: பகைத்து வந்தால், அவ்வாறு பகைத்து வருவோன் கூற்றுவனே என்றாலும் கொன்றழிப்பதல்லது. தோற்றுப் பின்வாங்காதவனும், நட்புடையராயின், தான் தோற்பதையே அவர்கள் விரும்புவராயின், தோற்க நாணாதவனும் ஆகிய நல்லோன் மலையில், மகளிர் கையில் இட்ட மோதிரம் போல், காந்தள் அரும்புமீது தும்பி அமர்ந்து, அது மலரும் பருவத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும்.
தோழி: மான்குட்டி, பாறையில் அமர்ந்திருக்கும் கருங்குரங்கை, மருண்டு நோக்கிவிட்டு, பெரிய மலைமீது ஏறியும்