உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

ஒரு சம்பவம்‌ மட்டும்‌ போதும்‌, நாட்டுமக்களைக்‌ காட்டு மிருகமாக்க! எனினும்‌, மக்கள்‌ வரம்பு மீறிவிடவில்‌லை பொறுத்துக்கொண்டனர்‌, பொழுதுவிடியும்‌, பொல்லாங்கு மடியும்‌ என்று நம்பிக்கிடந்தனர்‌. யாரிடம்‌ முறையிடுவது இந்தக்‌ கேவலமான கேடுபற்றி! மாமன்றம்‌ கூடினால்‌, எடுத்துறைக்கலாம்‌. ஆனால்‌, மன்னன்தான்‌ மாமன்றம்‌ கூட்டவில்லையே! என்செய்வர்‌! ஏங்கினர்‌, கண்கசக்கிக்‌ கொண்டனர்‌!

கட்டாயக்கடன்‌, பலவந்தமான விருது, காட்டுவரி, கப்பல்வரி, எனும்‌ கொடுக்குகள்‌ கொட்டும்‌, மக்கள்‌ துடியாத்‌ துடிப்பர்‌, கையில்‌ பொருளும்‌ இல்லையே என்று அழுவர்‌ ‘பணம்தர’ இயலாதவரை, மன்னன்‌ கட்டாயப்படுத்திப்‌ படையில்‌ சேரச்செய்வான்‌, அல்லது வெளிநாடுகளுக்குத்‌ துரத்துவான்‌. கலாம்‌ விளையும்‌ என்று குறிதெறிந்தால்‌, அல்லது தெரிவதாக எந்த அதிகாரியாவது சொன்னாலும்‌ போதும்‌ இராணுவச்‌ சட்டம்‌ பிறக்கும்‌, நில்‌ அங்கே, யார்‌ போகிறது? என்று மிரட்டும்‌ குரல்‌ கேட்கும்‌, வேட்டுச்சத்தம்‌. கீழே பிணம்‌! இந்த முறை அமுலுக்கு வந்துவிடும்‌.

லாட்‌, வென்ட்ஒர்த்‌, இருவரும்‌ வகுத்த திட்டம்‌ இது,

மன்னன்‌, மாமன்றத்தின்‌ உதவியை நாடித்தான்‌ பணம்‌ பெறமுடியும்‌ என்ற நிலையை மாற்றிவிடவேண்டும்‌.

மக்களை எந்த நேரத்திலும் அடக்கிவிடக்‌ கூடிய அளவு படை மன்னனிடம்‌ இருக்கவேண்டும்‌.

சிலகாலம்‌ இதுபோல நிலைமை நீடித்தால்‌, அச்சம்‌ பிடித்துக்கொள்ளும்‌, உரிமை முழக்கம்‌ மடியும்‌, மன்னன்‌ ஈடு எதிர்ப்பின்றி இருக்கலாம்‌, சார்லஸ்‌ கொண்ட தத்துவம்‌, அழிக்கப்படமுடியாததாகிவிடும்‌.