உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

ஆட்சியை எதிர்ப்பது பேராபத்து என்று உணரும்‌ வகையில்‌, தண்டனைகள்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

இந்த போக்குடன் இருவர்‌; நாடு, சீரழியாது போகுமோ! ஆனால்‌ அந்த இருவரும்‌, மன்னரும்‌, கொடுமைகளைத்‌ தாங்கிக்‌ கொள்ளும்‌ பழக்கத்தை, உரிமையின்‌ அருமையை அறிந்த மக்கள்‌ பெற்றுவிடுவது அணைக்கமுடியாத பெரு நெருப்பாகமாறிவிடும்‌ என்ற உண்மையை அறியவில்லை, கண்ணீரைத்‌ துடைத்துக்கொண்டு. கரத்தைக்‌ காட்டி மன்‌னரின்‌ சிரத்தைக்‌ கிள்ளி எறியும்‌ ஆற்றலை மக்கள்‌ பெறுவர் என்பதை எதிர்ப்பார்க்கவில்லை. உலைக்கூடத்திலே, களத்திலே பிணங்கள் விழவும்‌ கழுகுகள்‌ கொத்தித்‌ தின்பதற்காக வட்டமிடவுமான காரியத்துக்கு ஓர்‌ நாள்‌ பயன்‌படுகிறது! மக்கள்‌ கொடுமைக்கு ஆளானது, அவர்களை அந்த நிலைக்குக்‌ கொண்டுசெல்லும்‌ என்பதை அவர்‌களால் யூகித்தறிய முடியவில்லை. தங்கள்‌ திட்டம்‌ வெற்றி பெறுவதாகவே எண்ணினர்‌, ஏமாந்தனர்‌.

அளவுக்கு மீறிய அட்டகாசம்‌ நடைபெறுகிறது, இதனால்‌ ஆபத்து விளையும்‌ என்று பிரபுக்கள்‌ சிலர்‌ மன்னனுக்கு இதமாக அறிவுரை கூறிப்பார்த்தனர்‌, தோற்றனர்‌. மாமன்றத்தைக்‌ கூட்டாதது, மக்கள்‌ மனதிலே பெருங்‌கோபத்தை மூட்டிவிட்டது என்பதை எடுத்துரைத்தனர்‌, ஏளனம்‌ செய்யப்பட்டனர்‌. சிலர்‌. உரிமை அழிந்துபடுவதற்கு நாமும்‌ உடந்தையாக இருந்தோம்‌ என்ற பெருங்குற்றம்‌ தம் மீது சாராதிருக்கவேண்டுமென்று கருதினர்‌, மக்கள்‌ சார்பிலே நிற்கத்‌ தலைப்பட்டனர்‌. ஆனால்‌ எவரும்‌ மிரட்சி அடையக்கூடிய விதமாக அடக்குமுறை இருந்தது.

வில்லியம்ஸ்‌, என்றோர்‌ மத அலுவலர்‌, இவருக்கு