சாம்பல்
39
படைத்தலைவன் முதலில், பல்லவ மன்னன் பிறகு! மன்னன் மண்பொம்மை, பரஞ்ஜோதி; அதைக் காட்டும் விளக்கு!
பரஞ்ஜோதியாக இருக்க இசையலாம். யாரும்! பரஞ்ஜோதியின் புகழ் ஒளிமுன், மின்மினி போன்று மன்னவன் என்ற பட்டத்தை மட்டும் தாங்கிக் கொண்டிருக்க யாருக்கு மனம் இடங்கொடுக்கும்?
எங்கே போர் மூண்டாலும் இனி, என்ன பேசுவர், “பல்லவனுக்குப் பயமில்லை. பரஞ்ஜோதியார் இருக்கிறார்” என்று கூறுவர். “என் அரசு, அவருடைய ஆற்றலை அரணாகக் கொண்டுதான் நிலைக்க முடியும் என்ற நிலை! எத்தனை மண்டலங்களிலே இதுவரை கேலி மொழி பேசினரோ, யான் என்ன கண்டேன்.”
“பல்லவன் ஏன் போருக்குத் துள்ளுகிறான் தெரியுமா? பரஞ்ஜோதி இருக்கிற தைரியம்!”
“எனக்கும் ஒரு பரஞ்ஜோதி கிடைத்தால் நானும் நரசிம்மப் பல்லவன் போலப் பெருமை அடைந்துதான் இருப்பேன்” என்றேல்லாம் பேசி இருப்பர். என் மண்டல மக்களும் அதே மனப்போக்கைக் கொண்டுள்ளனர்.
பல்லவன்—பரஞ்ஜோதி—இரு பதவிகளில்! என்னைக் கேட்டால், பரஞ்ஜோதிப் பதவியே மேல் என்பேன்!
இரு ‘அரசு’ ஏற்பட்டுவிட்டது. ஆம்! ஆற்றலரசனாகிவிட்ட பரஞ்ஜோதி ஓர் அரசர்! அரசர் மகனானதால் அரசனான் நான் ஓர் அரசன்! ஒரு மண்டலத்தில் இரு அரசர்களா? கூடாது! நிலைக்காது!!
ஆகவேதான், அவர் விலகுவதால் நஷ்டம் என்றபோதிலும் விலக்கவேண்டி நேரிட்டது. மண்டலம் பலவற்றை, அந்த மாவீரனுடைய துணையால் பெறலாம்! ஆனால் என்ன பலன்? புது மண்டலங்கள், பழைய மண்டலம், இரு இடமும். என்னை மட்டுமல்லவே, அவரையும்தானே, அரசராகக் கொள்ளும்! பல்லவ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தப்