சில வேடிக்கைக் கதைகள்
347
எறும்பு உண்ணுகிறது. உறங்குகிறது. மணம் புரிகின்றது. குழந்தை பெறுகிறது, ஓடுகிறது. தேடுகிறது, போர் செய்கிறது, நாடு காக்கிறது.
இதற்கெல்லாம் காற்றுதான் ஆதாரம்.
மகா சக்தி காற்றைக் கொண்டுதான் உயிர் விளையாட்டு விளையாடுகிறாள்.
காற்றைப் பாடுகிறோம்.
அஃதே அறிவிலே துணிவாக நிற்பது.
உள்ளத்திலே சலனமாவது.
உயிரில் உயிர், உடம்பில் வலிமை.
வெளியுலகத்தில் அதன் செய்கையை அறியாதார் யார்? அறிவார் யார்? காற்றுத் தேவன் வாழ்க.
மழைக்காலம். மாலை நேரம். குளிர்ந்த காற்று வருகிறது.
நோயாளி உடம்பை மூடிக் கொள்ளுகிறான், பயனில்லை.
காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது.
உயிர் காற்றாயின் அதற் கஞ்சி வாழ்வதுண்டோ? காற்று நம்மீது வீசுக.
அது நம்மை நோயின்றிக் காத்திடுக.
மாலைக் காற்று நல்லது. கடற் காற்று மருந்து. ஊர்க் காற்றை மனிதர் பகைவனாக்கி விடுகின்றனர்.
அவர்கள் காற்றுத் தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை.