உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எல்லோரும்‌ இந்நாட்டு மன்னர்‌

13


முன்பொருமுறை, இப்போது இருந்துவரும்‌ எல்‌லோரும்‌ ஓட்‌அளிக்கும்‌ முறை, இனியும்‌ நீடிக்க வேண்டுமா? அதைவிட, மறைமுகத்‌ தேர்தல்‌ முறை இருப்பது நல்லதல்லவா?-என்ற கருத்துப்பட, நேரு பண்டிதர்‌ பேசி இருக்கிறார்‌.

குடி அரசுதான்‌ சிறந்தது, ஆனால்‌ அது கட்சிகளற்ற குடி அரசாக இருக்கவேண்டும்‌—ஆனால்‌ அதேபோது சர்வாதிகாரமும்‌ கூடாது, சோவியத்‌ முறையும்‌ ஆகாது!—என்று ஜெயப்பிரகாஷ்நாராயணன்‌ கூறிவருகிறார்‌.

பெரியார்‌, பலமுறை பேசியிருக்கிறார்‌, இராஜாவே ஆண்‌டால்‌ என்ன? சர்வாதிகாரி இருப்பதுதான்‌ நல்லது!—என்றெல்லாம்‌

அவர்‌, இந்த நாடுபற்றியும்‌, ஆட்சிபற்றியும்‌ என்ன கருதுகிறார்‌ என்பதை அறிந்துகொள்ள அவர்‌ பன்முறை பேசி இருக்கிற ஒரு கருத்தைக்‌ கவனித்தாலே போதும்;

“இந்த நாட்டை எவன்‌ ஆண்டால்‌ என்ன? இந்த நாட்டை ஒரு ஜதை செருப்பு ஆண்டிருக்கிறது, 14-வருஷங்கள்‌” என்று பேசி இருக்கிறார்‌.

இதைக்‌ கவனிக்கும்போது, அவர்‌, இந்த நாட்டு மக்களுடைய போக்கைக்குறித்துக்‌ கொண்டுள்ள வெறுப்புத்‌தான்‌, அவரை அவ்விதம்‌ பேசவைக்கிறதேயன்றி, ஆட்சி முறைகளிலே, எது சிறந்தது, எது தரமானது என்று எண்ணிப்பார்த்து அவர்‌ ஏதும்‌ கூறுவதாகத்‌ தெரியவில்லை என்பது விளக்கமாகிறது.

பாபு இராஜேந்திரர் போன்றவர்கள்‌, இன்று, சட்டம்‌ இயற்றும்‌ போக்குக்கண்டு கசப்புற்று, இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது சட்டம்‌ இயற்ற என்று பேசுவது. என்ன