அறிஞர் அண்ணா
7
அறிவுறை ஆற்றும்—ஆச்சாரியார், முன்னுக்குப் பின் முரணாக குலத்தொழிலும் வளர வேண்டும், கலப்பு மணமும் செய்து கொள்ளவேண்டும் என்று கூறுவது தவறு என்று தோழர் இராமச்சந்திரன் குறிப்பிட்டார். அவர் நமது கூட்டங்களிலே பேசி அதிகமாக பழக்கமில்லை. ஆதலால், வண்ணான், அம்பட்டன் என்று கூறிவிட்டார்.
வண்ணான் என்பதை நாம் சலவைத் தொழிலாளி என்றும், அம்பட்டன் என்பதை மருத்துவத் தொழில் செய்பவர் என்றும், கூறுவதுண்டு, அதன்படி தோழர் கூறியிருக்க வேண்டும். பழக்கமில்லாததால், தவறி அப்படி கூறிவிட்டார். இந்த தவறுதலை எதிர்கட்சியாளர் பொது மக்களிடம் கொண்டுபோய், பார்த்தீரா திராவிட முன்னேற்ற கழகத்தை, பிறவியில் உயர்வு, தாழ்வு கூடாதென்கிறீர்கள். இராமச்சந்திரன், வண்ணான், அம்பட்டன் என்று ஜாதியின் பெயரைச் சொல்லி உங்களை கேவலப் படுத்திவிட்டார், என்று ஆர்பரிப்பார்கள். அதைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று பொது மக்களை கேட்டுக் கொள்ளுகிறேன்.
தோழியர் சத்தியவாணி முத்து பேசுகையில் பெண்கள் எழுச்சி பெற வேண்டும் என்பதற்கு உதாரணமாக கணவன், மனைவி நாடகத்திற்குச் சென்று திரும்பியபோது கூறிய வாதத்தைகளைக் காட்டினார்கள். துர்ச்சாதனன் துகில் உரிக்கும்போது, துரோபதை யார் என்று கேட்டாள். ஐவருக்கும் தேவி, அழியாத பத்தினி என்று கூறியதும், அவள், கணவ-