உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:போராட்டம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

போராட்டம்


யாண்ட முறைகள் பலப்பல. அவைகளில் ஒன்று கதா காலட்க்ஷேபங்கள்.

அவைகள், நாடு நகரங்களில் மட்டுமல்ல, பட்டி தொட்டிகளிலும், வீதிகள் தோறும் நடைபெற்று வருகின்றன. அவர்கள் ராமாயணம், பாரதம், அரிச்சந்திரா, நல்லதங்காள் கதைகளைக் கையாள்வதைப் போல நாமும் சீர்திருத்த வாதிகளான சாக்ரடீஸ் போன்றவர்களின் கதைகளை காலட்க்ஷேபத்தின் மூலம் பரப்பவேண்டும். இதனால், மிகுந்த பயனுண்டு, மக்களும் திருந்துவார்கள் நான் சென்ற ஆண்டில் திண்டிவனத்தில் நடைபெற்ற சமூக, சீர்திருத்த மாநாட்டில் இதை குறிப்பிட்டிருக்கிறேன். நமது பிரசாரகர்கள் இதை கையாளவேண்டுமென்று. இது நமக்கு புதியதுதான், பழக்கம் ஏற்படும் வரையில். அதன் பிறகு நம்மவரை மிஞ்ச எவராலும் முடியாது. காலட்க்ஷேபம் என்றதும், பயந்து விடாதீர்கள்! மிக எளிதானது, அதன் முறை தெரிந்து கொண்டவர்களுக்கு. இந்த முறையைக் கையாளவேண்டுமென்று, நான் நெடு நாட்களாக நினைத்ததுண்டு. என் நினைவை நிறைவேற்ற நீங்கள் முற்படவேண்டும்.

ஆச்சாரியார் அழிக்கப்படவேண்டியதை காக்க, அழகான முறையில் பேசி வருகிறார் எங்கு சென்றாலும். பஜனை செய்யுங்கள், பஜகோவிந்தம் பாடுங்கள். கடவுளை மறவாதீர்கள், மறந்ததால் மழையில்லை, பஞ்சம் வந்து விட்டதென்று. அவருடைய ஆரிய மத உபதேசம் அறவே ஒழிய வேண்டுமானால், நாமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போராட்டம்.pdf/12&oldid=1771900" இலிருந்து மீள்விக்கப்பட்டது