14
போராட்டம்
பக்தர்களுக்கு மிரட்சி, ஆரியத்திற்கு ஆட்டம் கொடுக்கும்.
இம்முறையை ஒரு சில ஆண்டு கையாண்டால், மேலும் நீண்ட நாட்களாக, இருந்து வந்த மூட பழக்க வழக்கங்கள் மறைந்து மண்மேடாகும். உதாரணம் வேண்டுவதில்லை.
நாம் நாடகத்தில் நடிக்க முற்பட்டோம். புராண நாடகங்கள் நடைபெறுவதை மக்கள் பார்க்கவும் வெட்கப்படுகிறார்கள். சினிமாவில் மாற்றத்தை காணமுடிந்தது, நம்முடைய பிரச்சாரத்தால். சென்ற ஆண்டு எடுக்கப்பட்ட ஐம்பத்தி மூன்று படங்களில், ஐம்பத்திரண்டு படங்கள் சமூக சீர் திருத்தத்தைப் பின்பற்றி எடுக்கப்பட்டது. அவ்வளவும் கழகப்படமல்ல. எந்த கோணத்தில் பார்த்தாலும் அவைகள் நம்முடைய பிரச்சாரத்தால் மாற்ற மடைந்தவை.
மக்கள் விருப்பம் படி மாற்றம் தேவை என்பதை அறிந்து பட முதலாளிகள் தங்கள் செய்கைகளையும் மாற்றிக்கொண்டார்கள். ஆகவே கலையில் மறு மலர்ச்சியைக் கண்டோம். காலட்க்ஷேபத்திலும் அப்படியே காணமுடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
முதியோர்களுக்கு காலட்க்ஷேபம் மூலம் கல்வி அறிவைப் புகுத்தலாம். ஒருவர் படித்து தெரிந்துக்கொள்வதை விட கேட்டுத் தெரிந்துகொள்ளும்படிச் செய்ய இது மிகவும் சாதகமானது.