பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 515 யில்தடுத்து நிறுத்துகின்றான். பயிர் செய்யும் எம்தோட்டத்திற்கு ஏகுகின்றோம். முன்பு ஒர் முறை இப்படித்தான் தடுத்து நிறுத்தி னாய், இன்றும், விலக்குகின்றாய். என்ன, நீ பித்தேறினாயோ? என்னைப் போகவிடு' என்கின்றாள். நான் போக விடேன்' என்கின்றான் ஆய மகன். நீ இவ்விடத்தினின்றும் அகன்று போவாயாக. தன்னுடைய கன்றினை அணுகுவார்மேல் சினத் துடன் புனிற்றா செல்வது போல, நீ என்மேல் வந்தது காணில் என் அன்னை தறுகண்மையுடையளாய் வந்து சீறுவாள்' என்று எச்சரிக்கின்றாள் ஆய மகள். அது கேட்டு அவன், யாய்வருக ஒன்றோ பிறர்வருக மற்றுநின் கோவரினும் இங்கே வருக தளரேன்யான் நீயருளி நல்கப் பெறின். என்று தன் அச்சமின்மையைக் கூறுகின்றான். ‘'நீ அருள் செய்து என்னைக் கூடினால், நின் ஆய் வரினும் வரட்டும்; அயலார் வரினும் சரியே; அவர்களே யன்றி நின் தந்தைதான் வரினும் - வருக. யான் தளர்ச்சியுறேன்' என்கின்றான். (கலி-116). ஏறுகோள் கூறினும் ஆயர்தம் பிற பழக்கங்களைத் தலை மக்களாகக் கூறினும், நளினச் சொல்லாட்டங்களை நவின்றாலும் திணை இலக்கணம் பிறழாதவாறு பாடுவர் நல்லுருத்திரனார். உள்ளப் புணர்ச்சி என்னும் ஒரு திருமணமே அகத்திணையின் ஒரு தலையாய குறிக்கோள். அயலவர்தம் மணப்பேச்சு அசைத்துப் பார்க்கும் ஒரு பெரிய நெம்புகோல். இது தலைவனது வரைவு நீட்டிப்புக்கும் அத்தகையபேச்சுக்கும் இடம்அளிக்கின்றது. ஆதலின் கற்பிற் சிறந்த தமிழ்க் களவுக் காதலி தமிழ்ச் சமுதாயத்தில் தூய வாழ்க்கைக் குறிக்கோளைத் தோழிக்கு நினைவு கூர்கின்றாள். நொதுமலர் வரைவு உடனே தடுக்கப்பெறல் வேண்டும் எனவும், தலைவன் விரைந்து வரைந்து கொள்ள ஏற்பாடு செய்தல் வேண்டும் எனவும் அறிவு கொளுத்துகின்றாள். இன்றேல் அறக் கேடும் உயிர்க் கேடும் நிகழும் என்பது அவளது குறிப்புரை. தலைவியின் தலையாய குறிக்கோள், தமிழினத்தின் காதல் நெறி, புலவர் பெருமானின் அறிவுரை எல்லாம் கலந்த ஒரு முல்லைக் கலி, விரிநீர் உடுக்கை உலகம் பெறினும் அருநெறி ஆயர் மகளிர்க்கு இருமணம் கூடுதல் இல்லியல் பன்றே: 4. கலி-114.