பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் உறவுடையோர் . 35i (iii) செவிலி பிறந்தநாள் தொட்டுத் தலைவியைச் சிறந்திட வளர்த்து வருபவள் செவிலி. இவளே தலைவியின் உயிர்த் தோழியாக இருப்பவளை சன்ற தாய், நற்றாய்க்குத் தோழியாக இருப்ப வள். இதனை, . : செவிலி நற்றாய் தோழி யாகி அவல நீக்கி அறிவும் ஆசாரமும் கொளுத்தித் தலைவியை வளர்த்த தாயே." என்று கூறுவர் நாற்கவிராச நம்பி. தொல்காப்பியரும், ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப் படுவாள் செவிலியாகும்.' என்றும், கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள் நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும் செவிலிக் குரிய ஆகும் என்ப." - என்றும் இவளை அறிமுகம் செய்து இவளவு கட'ைளையும் தெளிவுறுத்துவர். இவற்றுள் முதல் நூற்பாவுக்கு உன் கூறும் நச்சினார்க்கினியர் "தாய்த்தாய்க் கொண்டு உயிர் ஒன்றாய் வருகின்றாளென்று ஆராய்ந்து துணியப்பெற்ற பெருஞ் சிறப்புக் காரணமாக கூறுதற்குரிய மறைப் பொருளெல்லாம் குறிப் டானன்றிக் கூற்றாற் கூறத் தக்காளாதலின் தாயெனச் சிறப் பித்துச் சொல்லப்படுவாள் செவிலியேயாம் என்றவாறு’ என்று கூறியுள்ளதையும் காண்க.இவள்பொறுப்பில்தான் தலைவி"உடல் நலமும் உரன் நலமும் பெற்றுத் தலைவி என்ற பெயர்க்குரியவளா கின்றாள். செவிலியால் வளர்க்கப்பெற்றமையை அறிவதற்கு நேர் முறையில் பாடல்களைக் காண்டல் அரிது. ஆயின் வேறு செய்தி களைக் கூற வரும் இடத்தில் வரும் குறிப்புகளால் இதனை அறி. கின்றோம். நற்றிணையில் உள்ள ஒரு பாடலின் பகுதி இது: பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் விகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப் புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் 44. நம்பி. அக 111 . 45. களவியல்.33(நச்). 46. கற்பியல்-12 இளம்)