பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுகையும் ஆன்மிக வாழ்வும் 145

சடகோபன்’ என்ற அவரது திருவாக்கினாலேயே அறிகின்றோம்.

இங்கணமே, சைவ அடியார்களுள் மணிவாசகப் பெருமான் அழுகையையே வீடு பெறும் வழியாகக் கொண்டு உய்ந்த ஞானியாவார். அவர்,

"யானே பொய்என் நெஞ்சும்

பொய்என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால்

உன்னைப் பெறலாமே."

என்று கூறியிருப்பதை அறியலாம். இவருடைய திரு வாசகம் முழுவதும் இங்ஙனம் ஆண்டவனை நோக்கி அழுத திருப்பாடல்களேயாகும். இவை இன்று நமக்கு 'எல்லை, மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன், திருவாசகம் என்னும் தே ை ஆகத் தித்திக்கின்றது. மாணிக்கவாசகரின் அழுகைக் குரலை நன்கறிந்த ப ஞ் சோதியார், அவரை 'அழுது அடி அடைந்த அன்பன்' என்று போற்றி மகிழ்வர்.

திருவாய்மொழி, திருவாசகம் ஆகிய இரண்டு சொற் றொடர்களும் ஒரே பொருளைத் தருவன. இரண்டுமே பெரிய ஞானியரின் அழுகுரல்களின் தொகுப்புகள்; ஆன்மிக வாழ்விறகு நெறியமைத்துத்தரும் அருள் மொழிகள் மைத்த பக்திக் கருவூலங்கள். இவை இரண்டையும் பயின்று, அழுகை வழியைத் துணையாகக் கொண்டு ஆன்மிக வாழ்வினை அமைத்துக் கொள்வோமாக! இந்த வாழ்வே ஆண்டவனை அடையும் பெருநெறி என்பதையும் அறிவோ it mos!

14. திருவாய். 10.10:10

15. திருச்சதகம்- 0

16. பரஞ்சோதி-திருவிளையாடல்-மதுரைக

காண்டம-21,