படைப்புகள் 45
சொந்தத் தாயாகும் என்று அவர் நம்பிஞர்; அதை காராவி என அவர் குறிப்பிட்டார். இந்த நாட்டுப்புறப் பாடல்களும் நாடோடிக் கதைகளும் ஹர்யான் மற்றும் பிராஜ் தாக்கங்கள் பெற்றிருக்கின்றன: உருதுத் தன்மைகளையும் ஏராளமாகக் கொண்டுள்ளன.
இந்தி தேசீய மொழி ஆகவேண்டும் என்று பரிந்துரைப்பதில் அவர் தீவிரமாக இருந்தார். எனினும் அவர் ஒரு மொழி வெறியர் அல்லர். இந்தியுடன், இந்தியின் வட்டார வழக்குகள் என்று கூறப்படுகிற அனைத்தும் (அவற்றை "தாய் மொழிகள்’ என்று அவர் குறிப்பிட்டார்), அவதி, போஜ்புரி, பிரஜா, ராஜஸ்தானி முதலான பலவும், அவற்றின் மூலமாக ஆரம்பக் கல்வி பயிற்று விக்கப்படுகிற அளவுக்கு அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்று அவர் நம்பினுர். இப்படி தாய் மொழிகள்’பற்றி அவர் பேசி யதை, இந்தியை துண்டு துண்டாக்குகிற செய்கை என்றும், சோவியத் செயல்முறையை இந்தியாவில் புகுத்த விரும்புகிற போக்கு என்றும் அவருடைய விமர்சகர்கள் கருதிஞர்கள். அவரே சென்ற மகாயுத்த காலத்தில் போஜ்புரியில் சில நாடகங்கள் எழுதினர். இதெல்லாம் முப்பது வருடங்களுக்கு முன்பு செய்யப் பட்டது. அப்போது, சாகித்திய அகடமி பின்னர் செய்ததுபோல, மைதிவி, அல்லது ராஜஸ்தானி அல்லது நேப்பாளிக்கு இலக்கிய அந்தஸ்து கொடுப்பது பற்றிய பிரச்சினை எண்ணப்பட்டதுமில்லை, விவாதிக்கப்படவுமில்லை. ஆகவே, சிறுபான்மை மொழி இனங் களைப் பாதுகாப்பது என்ற கொள்கையைப் பரிந்துரைப்பதில் அவர் முன்னேடியாக இருந்தார். ஆனல், துரதிர்ஷ்டவசமாக, 1948-ல் பம்பாயில் நடைபெற்ற இந்தி சாகித்திய சம்மேளன மாநாட்டின்போது அவர் நிகழ்த்திய தலைமை உரையும், உருது மொழிக்கு தேவநாகரி எழுத்தை உபயோகிக்கவேண்டும் என்று அவர் வலிமையாக எடுத்துக் கூறியதும், கடுமையான வாக்கு வாதங்களைக் கிளறிவிட்டன. உருது பேசும் கம்யூனிஸ்டுகள் பலர் சேர்ந்து, ராகுலே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளி யேற்றும்படி கவனித்துக்கொண்டார்கள்.
"தாய் மொழிகள் சார்பில் ராகுல் பேசி வந்தது பலத்த எதிர்ப்பை உண்டாக்கியது. எனினும், பூர்.பஞரசிதாஸ் சதுர்வேதி, டாக்டர் வாசுதேவசரண் அகர்வால், பண்டிட் கேடித்திரேஷ் சந்திர சட்டோபாத்யாய, டாக்டர் உதயநாராயண் திவாரி போன்ற வலிமைமிக்க ஆதரவாளர்களையும் பெற்றுத் தந்தது. யஷ்பால் ஜெய்னின் மதுகர் என்ற சஞ்சிகை இக்கொள்கைக்காகப் பாடுபட்டது. ஆளுல் மாநிலங்கள் புனரமைப்புக் கமிஷனின் அறிக்கை வெளியிடப்பட்டது; இந்தி பேசும் மாநிலங்களை மேற்