பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் தி 23

அங்கீகரிப்பதில்லை. திருக்கோயிலைச் சார்ந்து வளர்ந்த வாழ்வியல் தத்துவம், ஊடல் தணிதலுக்கும் புலவி தீர்த்தலுக்கும் உரிய முயற்சிகளை மேற்கொள்ளும். திருநீல கண்டர் வாழ்க்கையில் அவருக்கும் அவர் தம் மனைவிக்கும் ஓர் ஆழமான புலவி தோன்றிவிட்டது. பல ஆண்டுகள் பிரிந்து வாழ்கின்றனர். தில்லையம்பலத்திலுள்ள ஆடல் வல்லானுக்கு இவர்களின் புலவியும், புலவி வழிப்பட்ட பிரிவும் உறுத்தலைத் தந்திருக்கிறது. ஆதலால் ஆடல் வல்லானே முன்னின்று அவர்தம் புலவியைத் தீர்த்து, வாழச் செய்தருளினன். அதுபோலவே, சுந்தரர் பரவையாரிடையே தோன்றிய ஊடலைத் தீர்க்க, பெருமானை

"நாயன் நீரே நான் உமக்கிங்கு அடியே னாகில் நீர் எனக்குத் தாயின் நல்ல தோழருமாம் தம்பிரா னாரேயாகில் ஆயஅறிவும் இழந்து அழிவேன் அயர்வுநோக்கி அவ்வளவும் போய் இவ்விரவே பரவையுறு புலவி தீர்த்துத் தாரும்”

6TöᏈᎢ ,

கழுதுகண்படுக்கும் நள்ளிரவில் பரவையார் பால் நடந்து துது சென்ற காட்சியை எந்த எழுத்துக்களால் எழுதிக் காட்ட இயலும்! சேக்கிழாரால் மட்டுமே இயலும்!

"இறைவர் விரைவின் எழுந்தருள

எய்தும் அவர்கள் பின்தொடர

அறைகொள் திரைநீர் தொடர்சடையில் அரவு தொடர, அரிய இளம்

பிறைகொள் அருகு நறை இதழிப்

பிணையல் கரும்பு தொடர, உடன்

மறைகள் தொடர, வண்தொண்டர்

மணமும் தொடர வரும்பொழுது”