பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

d ty

கொண்டவர்கள் சுப்ரமணிய பாரதியாரின், தேசீய உணர்ச்சி களை உலுக்கும் கவிதைகளை மேடையின்மீது பாடிக் கேட்பவர் களுடைய உள்ளத்தையும் உணர்ச்சியையும் உருக்கிப் பரவசப் படுத்தினர்கள். அந்தப் பரவசத்தின் காரணமாக அவர் களிடையே ஒரு வேகமும், வீரமும், வெறியுங்கூட உண்டாயிற்று. ஆனால், சுப்ரமணிய பாரதியாரை ஒரு தேசீய கவி என்று மாத்திரம் நாம் கூறுவோமேயானல், அவரை முழுமையாகப் புரிந்து கொண்டவர்களாக ஆகமாட்டோம். உண்மையில் காந்திஜியைப் போல அவரும் அரசியலுக்கு வந்தது தம்முடைய பரந்த குறிக்கோளின் ஒரு பகுதியை நிறைவேற்றிக் கொள் வதற்கான வாய்ப்பு கிடைத்ததேைலயே. காந்திஜி தென்னப் பிரிக்காவில் நடத்திய போராட்டம் நிறவெறியை ஒழிப்பதற் காகத்தான். இந்த நிறவெறிப் போராட்டத்திற்குக்கூட ஏதோ இந்தியர்கள் கருப்பர்கள் என்ற காரணத்தினல் வெள்ளையர்கள் அவர்களைக் கேவலமாக எண்ணினர்கள், நடத்தினர்கள் என்பது மாத்திரம் காரணமாகாது. இறைவனல் படைக்கப்பட்டி மனிதர்கள் அனைவரும் அந்த இறைவனுடைய மக்கள் என்ற முறையிலே சமமானவர்கள்; அந்தச் சமத்துவம் நிறத்தினலோ மொழியினலோ, மதத்தினலோ, தேச எல்லையினலோ அழிந்து படக்கூடாது என்ற அடிப்படைதான் அந்தப் போராட்டத் திற்குக் காரணம். அந்தப் போராட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்திய விடுதலைப் போராட்டமும் பின்னர் அவருக்கு அமைந்தது. அதுபோலவே பாரதியரும் முதலில் ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவே எண்ணவும், பேசவும், எழுதவு தொடங்கினர். அந்தச் சமூகச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதிே இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியதாகும். அப்படி.ே அவர் படைத்த தேசீய கவிதைகளும் ஒரு இலட்சிய சமுதாய தைச் சிருஷ்டிக்க அவர் விரும்பியதின் ஒரு எதிரொலியாகே அமைந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த அடிப்படையை திரு. பெரியசாமித் துாரன் அவர்க பாரதியாரும் சமூகமும் என்ற இந்த நூலில் தெளிவா விளக்குகிறார்கள். பாரதியாருடைய கவிதைகளையும், வசன