இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24
எனக்கு அவளிடம் அனுதாபம் அதிகரித்தது. ஐயோ பாவம்; பெரிதாக வளர்ந்து வருகிற ஒரு கலை தொழிலில், அதே வேகத்தோடு வளர்ந்து அந்த தொழிலுக்காகவே தங்களையே காவுக்கொடுத்துக் கொள்ளும் இனத்தின் ஒரு சிறு புள்ளி அவள். அவளுக்கு உயர்வில்லை. உய்வு கிடையாது. அவள் ஒரு எக்ஸ்ட்ராதான்?.