பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 அறிவியல் தமிழ்

"மாயப் பொருபடை வாணனை

ஆயிரம் தோளும் பொழிகுருதி பாயச் சுற்றிய ஆழிவல்லான்” குருதி.இரத்தம்; பாய-வெள்ளமாகப் பாய;ஆழி. சக்கரம்) என்றும், கம்சனுடைய ஆயுதசாலையுள் புகுந்து வில்லை வளைத்து முறித்த செயல்ையும், ஐந்து தலைகளுடைய காளியன் என்னும் நாகத்தின் தலையின் மீது குனித்து அதன் செருக்கையும் வலியையும் அடக்கிய செயலையும் அது சந்திக்கும் முறையில்,

......"திருமதுரை யுட்சிலை குனித்து ஐந்தலைய பைந்தா கத்தலை பாய்ந்தவன்" |வை.வில்; தனித்து-வளைத்து, பைந்தாகம்-க்க யுடைய பாம்பு! என்றும் பெரியாழ்வார் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்து உரைப்பதைக் காணலாம்.

இரு சமயத்தினரும் இவ்வுலகிலும் அவரவர் வீட்டு லகிலும் இறைவர்கட்கு அடிமை செய்வதையே குறிக் கோளாகக் கொண்டிருப்பவர்கள். இரு சமயத்தைச் சேர்ந்த அடியார்களும் தம்மை ஏழு தலைமுறையாகவும் இருபத்தொரு தலைமுறையாகவும் வழிவழி அடிமை செய்து வருவதாகக் கருதும் மரபு ஒன்று உண்டு. இருவர் பாடல்களிலும் இம்மரபினைக் காணலாம். இதனை,

மழவிடை யாற்கு வழிவழி

யாளாய் மண்ஞ்செய் குடிப்பிறந்த பழ அடி யாரொடுங் கூடி

எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே”

18. பெரியாழ்வார்-7 19, பெரியாழ்வார்-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/84&oldid=534103" இலிருந்து மீள்விக்கப்பட்டது