பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 அறிவியல் தமிழ்

அறிவியலறிஞர்களிடையே மாறு ப ட் ட கருத்துகள் இல்லாமல் இல்லை. இத்தகைய கொள்கை போன்றதொரு கருத்தினை,

"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ரா.கி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்.'

என்று மணிவாசகப் பெருமானும் கூறுவர்.

வானியியல் வானியியல் (Meteorology) பற்றிய ஒரு சில கருத்துகளையும் இலக்கியங்களில் காணலாம். மேலே செல்லச் செல்ல காற்று இலேசாக இருக்கும் என்பது விண்வெளி ஆராய்ச்சியால் பெறப்படும் உண்மை யாகும். கடல் மட்ட அளவில் பத்து மைல் உயரத்தில் காற்று பத்தில் ஒரு பங்காகிவிடுகின்றது என்றும், இரு பது மைல் உயரத்தில் அது கிட்டத்தட்ட நூறில் ஒரு பங்காகக் குறைந்து விடுகின்றது என்றும், முப்பது மைல் உயரத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காகி விடுகின்றது என் அம் இந்த ஆராய்ச்சியால் அறிகின்றோம். இத்தகைய ஒர் உண்மையைக் கம்பன் மிகச் சமத்காாமரகக் கூறுவன். இலங்கையிலுள்ள காளிகைகள் தேவர் உலகை எட்டும்படி யாக உள்ளன. மேருவையும் வருத்தக் கூடிய பேராற்றல் வாய்ந்த காற்று அந்த உயரத்தில் தென்றலாக வீசுகின்ற தாம்.

"நாகா லயங்களொடு நாகர் உல கும்தம்

பாகார் மருங்குதுயில் என்ன உயர் பண்ப;

14. திருவாசகம்-சிவபுராணம் ஆடி (25–31)