உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



5
குறிஞ்சி வளம்

கொழும்பு நூதன சாலையில் கண்டியரசன் சிங்காதனமும், புத்தர் திருவுருவங்களும், பல ஓவியங்களின் மாதிரிகளும் இருந்தன. இன்னும் பல அரிய பொருள்கள் இருந்தன. அவற்றையெல்லாம் கண்டு களித்தேன். ஆயினும் என் உள்ளத்தில் ஊன்றி நின்றது பத்தினித் தெய்வத்தின் திருவுருவந்தான்.

மியூசியத்தைப் பார்த்துவிட்டு ஓரன்பர் வீட்டில் விருந்து உண்டேன். மறு நாள் ஞாயிற்றுக்கிழமை தான் கண்டியில் பாரதி விழா முதலிய நிகழ்ச்சிகள் நடக்க இருந்தன. ஆகவே, அன்று மாலையே புறப்பட ஏற்பாடுகள் செய்தார்கள். நண்பர் கணேஷ் தம் காரை வைத்துக்கொண்டு காத்திருந்தார். எங்களுடன் வீரகேசரி ஆசிரியர் திரு ஹரனும், வீரகேசரி வார இதழாசிரியர் திரு லோகநாதனும் புறப்பட்டார்கள். மாலை ஏழு மணிக்குப் புறப்பட்டது கார்.

இலங்கை ஒன்பது மாகாணங்கள் அடங்கியது. கொழும்பு மேற்கு மாகாணத்தைச் சேர்ந்தது. கண்டி மத்திய மாகாணத்தைச் சார்ந்தது. மத்திய மாகாணம் முழுவதும் மலைப் பிரதேசம். கண்ணைக் கவரும் இயற்கைக் காட்சிகளை அங்கே காணலாம் என்று அன்பர்கள் சொன்னார்கள். ரப்பர்த் தோட்டங்கள். கோகோத் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள்