இந்தப் பயணம் திட்டமிட்டபடி 12 நாட்கள் 2 மணி 36 நிமிடங்கள் 36 விநாடிகள் நடைபெற வேண்டிய பயணமாகும்.[1] அப்போலோ - 16 புறப்பட்ட பிறகு அது சுமார் மூன்று மணி நேரம் பூமியை வலம் வந்த பிறகு அம்புலியை நோக்கிப் புறப்பட்டது. அது மணிக்கு 39,200 கி. மீ. வேகத்தில் சென்றது. பூமியிலிருந்து அது புறப்பட்ட போது அதன் வேகம் மணிக்கு 50,000 கி.மீ. 36 மாடி உயரமுள் என சாட்டர்ன் - 5 என்ற இராக்கெட்டு அதனைச் செலுத்தியது.
இந்தப் பயணத்தில் கடற்படையைச் சேர்ந்த கேப்டன் ஜான் டபில்யூ யங் (வயது 41} விமானப்படை லெப்டினென்ட் கானல் சார்எஸ் எம். டியூக் வயது 36), கடற்படை லெப்டினென்ட் கமாண்டர் தாமஸ் கே மாட்டிங்கிலி (வயது 35: பங்கு கொண்டனர். இந்தப் பயணத்தின் தலைவர் கேப்டன் யங் குட்டிக் கப்பலாகிய ஓரியன் அம்புலியில் இறங்கிய பிறகு மாட்டிங்கிலி தாய்க் கப்பலாகிய காஸ்பரில்[2] இருந்தார்; அம்புலியை வலம்வந்து
- ↑ இஃது 1972 ஏப்ரல் 16.இல் தொடங்கி ஏப்ரல் 28 இக் நிறைவு பெற்றது.
- ↑ தாய்க்கப்பலுக்குக் காஸ்பர் என்றும் அம்புலியில் இறங்கும் ஊர்திக்கு ஓரியன் என்றும் பெயரிட்டனர். 'காஸ்பா' என்பது கேலிச் சித்திரக் கதைகளில் அடிக்கடி வரும் ஒரு படக்கதைப் பாத்திரம்: திரைப்படம், தொலைக்காட்சிகளிலும் தோன்றும் 'காஸ்பா' மற்றவர்கட்கு நலம் செய்யும் ஒரு குறளி, 'ஓரியன்' என்பது மிருக சீரிட நட்சத்திரக் கூட்டம். கிரேக்கப் புராணக் கதைப்படி, ஓரியன் அழ தம் வலிமையும் படைத்த ஒரு பெரிய வேடன். இடுப்பில் சிங்கத்தோலும் மூன்று நட்சத்திரங்கள் உள்ள கச்சையும் அணிந்தவன், தடியும் வாளும் தரித்தவன். அப்போலோ - 16 விண்வெளி விமானிகள் அம்புலி சென்று வரும் பயணம் முழுவதிலும் மிருசுசீரிடம் அவர்கட்குத் தெரியும்; அதைக் கொண்டு அவர்கள் திசை. கண்டு கொள்ளலாம்.
(அடுத்த பக்கம் பார்க்க) அப்போலோ - 16 இல் மூவரும் பயணம் செய்கையில் டெக்ஸ்டாஸ் மாநிலத்தில் ஹூஸ்டன் நகரிலுள்ள விண்வெளிப் பயணக் கண்காணிப்பு நிலையத்தார். வீண்வெளி விமானிகளுடன் தொடர்பு. கொள்ளுங்கால் 'அப்போலோ-16' என்று அழைப்பர். நிலாவூர்தி தனியாகப் பிரிந்தவுடன் 'காஸ்பர்' என்றும், 'ஓரியன்' என்றும் கூப்பிடுவர். இக்காரணத்தால் தான் இவற்றிற்குத் தனிப்பெயர்கள் இடப்பெற்றன
(முன் பக்கத் தொடர்ச்சி)